வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/15

தொடர்ந்து ஆசை காட்டினான் எமன்


33
பொன்னும் இசையும் புலமும் இளமையும்
மின்னும் மகளிரு முன்வசமாம் - இன்னும்நீ
ஏனவரும் ஆளாத தாளலாம் ஆன்மாவுக்
கானதைக் கேளா திரு.

    ழகு, புகழ், அறிவு, இளமை, இவற்றுடன் மின்னல் போல் ஒளிவிடும் தேவமகளிரையும் உன் வசமாக்குவேன்; மேலும், சாதாரணர்களுக்குக் கிடைக்கப் பெறாத மாட்சிகளும் உன் சொந்தமாகும்; உயிருக்கு என்ன ஆகிறது என்பதை மட்டும் கேட்காதே (என்றான் எமன்).

பொன்: அழகு
இசை: புகழ்
புலம்: அறிவு    முழுதும் கலை என்று சொல்லும் அளவுக்கு ஒரு மேலாண்மைப் பரிமாணம் உண்டென்றால், அது 'உடன்பாட்டுத் தந்திரம்' என்பேன். நமக்கு வேண்டியதைக் கேட்டுப் பெறுவது சுலபம்; அடுத்தவருக்குத் தேவையானதைக் கொடுப்பதும் சுலபம். கூட்டு முறையில், குடும்பம் தொழில் சமூகம் என்ற கூட்டு நிலவரத்தில், ஒருவருக்குத் தேவையானதை இன்னொருவர் பேரம் பேசி, கொடுத்து வாங்கி, அனைவருக்கும் நிறைவான விதத்தில் உடன்படிக்கை ஏற்படுத்துவது மிக மிகக் கடினம். இன்னும் மூன்று மிக போடலாம். (பொருள் தெரிந்து, சொல் தேடும் சங்கடம் மறுபடி. 'negotiation' என்பதற்குத் தமிழ்ச்சொல் தெரியவில்லை. யாரங்கே? தமிழ் எளிமையான வளமான மொழி என்றவரைப் பிடித்து வாருங்கள்).

    ஒரு கேள்வி: மக்களிடம் செல்வாக்கு மிகுந்த புராண சிவன், ராமன், க்ருஷ்ணன், முருகன் இவர்களில் யார் சிறந்த negotiator? process of eliminationல் இருவரை நீக்கி விடலாம்: உடன்பாடு வடக்கு என்றால் முருகன் தெற்கு - அசல் தமிழன்; அத்தனை சக்தியும் செல்வாக்கும் வைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் போன வெண்ணைச்சாமி, நெய் எடுக்கத் தெரியாமல் குருட்சேத்திரத்துக்கு நேர்வழி அமைத்தார் - அவரையும் நீக்கலாம். மற்ற இருவரில் ஒருவர் skilled negotiator என்று சொல்லும் அளவுக்கு அருகே வருகிறார். என் கருத்து இருக்கட்டும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நால்வரில் யார் சிறந்த negotiator?

    மேலாண்மைப் பார்வையில், உடன்பாடு ஏற்படுத்தும் தந்திரங்கள் பல உள்ளன. 'x,y நடத்தையறிதல்' என்று ஒரு அடிப்படைத் தந்திரம். தக்க வைப்பது அல்லது எடுத்துக் கொள்வதை x நடத்தையும், விட்டுக் கொடுப்பதை y நடத்தையும் குறிப்பன. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் y நடத்தையை வெளிப்படுத்துவது சமரசக் கொள்கையை முன்வைத்தாலும், 'ஏமாந்த சோணகிரி'யாகும் அபாயத்தை உண்டாக்கும்; லாபமில்லாமல் விட்டுக் கொடுத்தால், தேவையான நேரத்தில் எதுவுமே இல்லாமல் போய்விடலாம். அதே நேரம், தொடக்கத்தில் x நடத்தையை வெளிப்படுத்துவது உடனடி முறிவை ஏற்படுத்தலாம். (இதையே கொஞ்சம் புரட்டிப் போட்டால், வீட்டிலும் அமைதியேற்படுத்தும் வழிகளை அறியலாம்).

    மூன்றாம் வரம் முழுதும் 'உடன்படிக்கைத் தந்திர'ப் படிப்பினை எனலாம். எமன் இங்கே வெளிப்படுத்துவது x நடத்தையா, y நடத்தையா?

    மன் தொடர்ந்து ஆசை காட்டக் காரணமென்ன? நசிகேதன் அடிப்படையில் மனிதப் பிறவியைச் சேர்ந்தவன். மனிதப் பிறவியின் குணச்சித்திரத்துக்கேற்றபடி அவனை நடக்குமாறு தூண்டினான் எமன். இதுவரை அளித்தவற்றுக்கு மேலாக, அழகும் புகழும் அறிவும் தருவேன் என்றான். அனுபவிக்க இளமையைத் தருவேன் என்றான். அழகும் அறிவும் புகழும் இளமையும் பெற்ற ஆடவருக்கு வேறேதும் தேவை உண்டா? ஒளிரும் பெண்களை, தேவமகளிரை உடன் அனுப்புவேன் என்றான். சாதாரண மனிதர்களால் பெறமுடியாதது இன்னும் எதுவுமிருந்தால் அதையும் ஆளலாம் என்றான்.

    எமனுடைய ஆசை மொழியின் உட்பொருள்: "மனிதருக்கு மரணம் ஒரு இயற்கையான, அவசியமான நிகழ்ச்சி. அதை அறிவதால் வாழ்வை அனுபவிக்க இயலாமல் போய்விடலாம். மனிதனான நீ, மனிதனைப் போலவே வாழ்வதற்கான வரங்களைக் கேள். மரணத்தைப் பற்றிக் கேட்காதே".

    எமன் வழங்கிய கொடைகளையும் சலுகைகளையும் நசிகேதன் ஏற்பானா?

14 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

இழுத்துவரப் பட்டேன்.(உங்கள் தமிழால்)
Negotiation என்பதற்கு பேச்சுவார்த்தை என்ற சொல் போதாதா,துரை அவர்களே?

சிவகுமாரன் சொன்னது…

சிறுவன் நசிகேதனுக்கு பெண்ணாசை மூட்டியது தவறாகத் தெரியவில்லையா எம(தர்ம?)ராஜனுக்கு ?

geetha santhanam சொன்னது…

அதானே சிவகுமாரன். எமன் ஏன் இப்படி நசிகேதனுக்கு ஒவ்வாததாகவே கேட்கிறான். கேட்பவரை மயக்கும் இலவசங்களைத் தரத் தெரியவில்லையே எமனுக்கு.எமன் X, Y இரண்டிலும் இல்லாமல் ஒரு தனி லைனில் இல்ல இருக்கார்?

அப்பாதுரை சொன்னது…

வருக சிவகுமாரன், geetha santhanam,...

அப்பாதுரை சொன்னது…

பேச்சுவார்த்தை போதாது சிவகுமாரன் :)

அப்பாதுரை சொன்னது…

பெண்ணாசை மூட்டினானா எமன்? சுவாரசியமான கேள்வி சிவகுமாரன்.

ஒன்பது வயது சிறுவனுக்கு, இன்றைய கண்ணோட்டத்திலும், விளையாட்டைத் தவிர வேறு எதிலும் ஆசை 'மூட்ட' இயலாது என்று நினைக்கிறேன்.

நம் கண்ணோட்டத்தில் எப்படியோ, நசிகேதன் கண்ணோட்டத்தில் பெண்களை ஆடிப்பாடி மகிழ்விப்பவர்களாகப் பார்க்கிறான் - அடுத்த பாடல்களில் தெரியும்.

பெண்ணாசை என்ற கண்ணோட்டம் எனக்குத் தோன்றவில்லை - இருந்தால் தமிழ்ப் பாடலை வேறு விதமாக இன்னும் சுவையாக மாற்றியிருப்பேனோ என்னவோ! 'ஆசை'யைக் குறித்துக் கொண்டேன். இன்னொரு பாடலில் முடிந்தால் சேர்த்து விடுகிறேன். ஐடியாவுக்கு நன்றி.

வயதுக்கு ஒவ்வாத ஆசைகள், வரங்களைப் பற்றிய கருத்து சரியே, geetha santhanam. நசிகேதனே இந்தக் கேள்வியை எமனிடம் கேட்கிறான். எமன் அதற்குச் சொல்லும் பதிலும் சுவாரசியமானது. கடைசிப் பகுதியில் வரும் பாடல். அதுவரை பொறுக்க முடியவில்லையென்றால் இதோ clue: நசிகேதன் இன்னொரு பாடலில் சொல்லியிருக்கும் 'விதைப்பயிராய்ப் பின்விதையாம்'. (இது மட்டும் அந்த வயதில் எப்படிப் புரிந்தது?) எமன் சொல்வது: ஆன்மாவுக்கு வயதில்லை. எமன் நசிகேதனை 'அலையும் ஆன்மா'வாகப் பார்க்கிறான்.

geetha santhanam சொன்னது…

'அலையும் ஆன்மா' நல்ல விளக்கம் துரை

Santhini சொன்னது…

1) எமன் என்கிற மரணம் .....
2) உபசாரத்தின் காலதாமதம் என்ற பொய் காரணம் -----வரம் என்ற கேள்விகளை உருவாக்கும் பொருட்டு
3) நசிகேதன் என்கிற சமூகத்தின் கறைகள், கருத்தாக்கங்கள், அடையாளம் ஏதும் பதியாத சிறுவன், தான் கேட்டது கிடைத்தே ஆகவேண்டும் என்ற அடம் பிடிக்கும் வயதில்.
4) வரங்கள் என சொல்லப்பட்ட சாதாரண கேள்விகள்
5) வயது முதிர்ந்தவரின் எண்ணத்தில் சாதாரணமாய் உதிக்கும் கேள்விகள்.........ஒரு சிறு பாலகனின் வாயிலிருந்து கிளம்பியதாக சித்தரிக்கப்பட்டதால், வாசகரின் மனதில் ஆச்சரியத்தை உருவாக்குகின்றன. இது கவியின் உத்தி.
6) தெளிவு எனப்படும் அறிவின் முன் உலகாயத விஷயங்கள் அனைத்தும் அர்த்தம் இழப்பதால்,.பிற ஆசைகளை பொருட்படுத்தாது நசிகேதன் , அறிவு குறித்து மட்டுமே ஆர்வம் கொண்டவனானான் என்பது, கவி தான் .எடுத்துக் கொண்ட பொருளின் மதிப்பை கூட்டுவதற்காக செய்து கொண்ட உத்தி. ( like fore-play)
7) பெண்ணாசையும், ஒரு வளர்ந்த மனிதனின் ஆசையே. அல்லது அந்த காலத்தில் .....பால்ய விவாகங்கள் நடப்பில் இருந்த கால கட்டத்தில், அந்த வயதில் பெண்ணின் மேல் ஆசை கொள்வது, இயல்பான விஷயமாய் கூட இருந்திருக்கலாம்.

மேற்சொன்ன விஷயங்களெல்லாம், கவித்துவத்தை இழக்க வைத்து, காரணம் பற்றி மட்டுமே பார்க்கும் கோணத்தை உருவாக்கும் . இதை வெளியிடா விட்டாலும் தவறில்லை.

negotiation- பேரம். இது தூய தமிழ் வார்த்தை அல்லவென்பது என் ஊகம்.

Santhini சொன்னது…

Moderation இருக்கிறது என நினைத்து எழுதினேன். பார்த்தால் உடனடியாய் .....பின்னூட்டத்தில் வந்து நிற்கிறது. கவித்துவமும், ஆஹா ஓகோவென்ற, .amusing feeling ..ம் இல்லாமல் ஒரு கவியை படித்தால்,
அது ஒரு கவியின் உழைப்பை அவமானப் படுத்துவது போலாகிவிடும். உறைந்திருக்கும் உண்மை தெரிந்துதான் ஆகவேண்டுமெனினும். ஆனாலும் ........சொல்லப் பட்டது சொல்லப் பட்டதே.
தேவையெனில் நீக்கி விடுங்கள் அப்பாதுரை.
--

அப்பாதுரை சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் Nanum.
பெண்ணாசை என்ற கண்ணோட்டம் எனக்குத் தோன்றவேயில்லை - ஆச்சரியம் தான்! அந்த நாள் பால்ய விவாக கலாசாரம் நிச்சயமாக ஒரு காரணம்.
#2 குட்டு உடைத்துவிட்டீர்கள்
#3 most likely reason. பிள்ளைக்கு அடம் பிடிக்கத் தெரியும். சில பெரியவர்களுக்கும்.

அப்பாதுரை சொன்னது…

பெண்ணாசையில் தவறிருப்பதாகத் தோன்றவில்லை சிவகுமாரன் - பொன்னாசை மண்ணாசையில் தவறில்லையா? ஆசை என்ற கண்ணோட்டத்தில் எதன் மீதும் அளவற்ற பற்று வைக்கும் பொழுது அபாய சாத்தியமுண்டு.

பெயரில்லா சொன்னது…

//'அலையும் ஆன்மா' // Why? Paya romba mariyaathai koduthu adam pidikkarano??!!!
//வயதுக்கு ஒவ்வாத ஆசைகள்//:))) onnum solikka mudiyalinga sir.

//'விதைப்பயிராய்ப் பின்விதையாம்'//eluthil Appaji Style idhu.

Ethukku ithanai point Kadavule... :))) Entha thattil sapitta enna! pidicha suvayaana unavu, anbaana parimaaral, nalla pasiyum endral porukkumaa vayaru. Manasumallava niraigindrathu. Nal pada ellasuvayum thondaivarai endra etharthamum therinthuvidum.

Appaval thara mudiyaatha ethai speciala Eman tharamudiyum!??
//ஆசை என்ற கண்ணோட்டத்தில் எதன் மீதும் அளவற்ற பற்று வைக்கும் பொழுது அபாய சாத்தியமுண்டு. // imm sarithaan.

அப்பாதுரை சொன்னது…

வருக கடைக்குட்டி. "மனசும் நிறைகிறது, நாள்பட எல்லா சுவையும் தொண்டை வரை" - அழகாகச் சொன்னீர்கள். அனேகமாக உண்மை :)

அந்த நாள் காரைக்குடி நண்பரின் உறவினர்கள் மூன்று மாத அமெரிக்கப் பயணம் முடிந்து இந்தியா திரும்புகிறார்கள் என்பதால் என் வீட்டில் உணவருந்த அழைத்திருந்தேன். மூன்று மாதமாக மகன் வீட்டில் சாப்பிட்டு நாக்கு செத்து விட்டது என்று மிக வருத்தப்பட்டு சொன்னதால், அவருக்குப் பிடித்த காரைக்குடி ஸ்டைல் சமையல் செய்திருந்தேன். எங்கள் வீட்டில் நான் மட்டுமே இந்திய உணவு சாப்பிடுவதால் அதிகம் சமைப்பது இல்லை - இருந்தாலும் நண்பருக்காகக் களத்தில் இறங்கினேன். பூண்டு காரக்குழம்பு, சேனைகிழங்கு முறுகல், கீரை, கத்தரிக்காய் கூட்டு, மிளகு தக்காளி ரசம், தனி ஊறுகாய் என்று வகை வகையாகச் செய்தேன். இந்தியக் கடையிலிருந்து நெய், தயிர் வேறு வாங்கி வந்தேன். இருபது வருடங்களாக உபயோகித்திராத பெரிய எவர்சில்வர் தட்டை எடுத்து வந்து சுத்தம் செய்து சமைத்த வகைகளைப் பரிமாறினேன். நண்பருக்கு கண்ணில் நீர் வந்து விட்டது. பரிமாறியதை எல்லாம் பார்த்து விட்டு, மெள்ளக் கேட்டார்: "சிப்ஸ் இருந்தா நல்லா இருக்குமே?"

நிறைவு ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதத்தில் வருகிறது.

பெயரில்லா சொன்னது…

இதில் ஆச்சர்யம் என்ன இருக்கின்றது அப்பாஜி. மீனாக்ஷி கல்யாணத்துலையே கருவேப்பில்லையை குறை சொன்னவர்கள் நம் makkal. நீங்க பாருங்க பாலாஜிக்கு திருப்பதி லட்டு படைச்சேல், அவர் இது ஏற்கனவே படைச்சாசினு சொல்லிட்டா பார்தேலா....
எதிலும் நிறைவு வராதது தானே மனித குணம். இன்றேல் பல விசயங்களுக்கு உலகில் அவசியமே இருக்காது. அதனால் தானே அதை ஒரு எல்லைக்கு மேல் தடை போட்டு கொள்ள பழக்கபடுத்துகின்றோம்.
அப்பாதுரை கூபிடுகின்றாரே ஏதாவது மொலகுகூட்டு, மோர்கொளம்புன்னு வந்திருப்பார். :)
அட நீங்க வேற, மூன்று மாதமாக மகன் வீட்டி இதையே தான் சப்பிட்டிரவருக்கு இங்கே வந்துகூட நமக்கு விமோச்சனம் கிடைக்கலயோனு நினைத்து கண்ணீர் விட்டிருப்பார்.
//இருந்தாலும் நண்பருக்காகக் களத்தில் இறங்கினேன்// தங்களின் உபசரிப்பில் மட்டற்று மகிழ்ந்த உங்க அந்த நாள் காரைக்குடி நண்பரின் உறவினர் பாருங்க எவ்லோ உரிமையோட சரி இங்கயாவது ஒப்புக்கு சிப்ஸ் சேத்து கிடைக்குமா என்று சொல்லிருப்பார். :))))))
அனால் நீங்கள் எழுதியதை மீண்டும் ஒருமுறை படித்து பார்த்து விழுந்து விழுந்து சிரித்தேன். குல்லா போட்ட விளையாட்டு வீரரின் முகத்தில் புன்னகை மிளிர்கின்றது அப்பாஜி.
சித்திரகுப்தன் அப்பாஜியிடம், எமன் வரம் தருவதற்குள் தேவ நேரப்படி நசியின் ஆயுள் முடிந்துவிடும் போல இருக்கு நண்பரே யாரங்கே! இந்த நாட்டாமையையே மாத்தசொல்லு...