வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/03/04

நீண்ட ஆயுள் கேள் என்றான் எமன்


31
பிரிதோர் வரங்கேட்டால் பூணிகாணிப் பேரும்
அரிதோர் அரசுந் தருவேன் - உரிமையுடன்
சிந்தையில் நாடிய சித்திரையும் நூறாண்டுச்
சந்ததியும் சீருறக் கேள்.

    மாற்று வரம் கேட்டால் உனக்கு நிலம், கால்நடை, பொருட்செல்வம் மற்றும் கிடைப்பதற்கு அரிதான அரச பதவியும் தருவேன்; உன் மனம் நிறையும் வண்ணம் நீண்ட ஆயுளையும், உன் சந்ததிகள் நூறாண்டுகள் சீரும் சிறப்புமாக வாழவும், உரிமையோடு வரம் கேள் (என்றான் எமன்).

பூணி: கால்நடை
காணி: நிலம்
பேர்: செல்வம்
சித்திரை: தமிழ் வருட முதல் மாதம். 'சிந்தையில் நாடிய சித்திரை' என்பதற்கு எத்தனை புத்தாண்டுகள் வாழ விருப்பமோ என்று பொருள்    ரண்டாவது மாணவனுக்கு லாட்டரிச்சீட்டிலும் விளையாட்டிலும் கவனம் திரும்பக் காரணம் என்ன? முதல் மாணவனுக்கும் சலன வாய்ப்புகள் இருந்தனவே? அவன் ஏன் கல்வியறிவுக்கான இலக்கிலிருந்து விலகவில்லை? தவறு-சரி என்ற தீர்வுப் பார்வையை ஒதுக்கிப் பார்த்தால், மனித இயல்பு எனும் நோக்கில், இரண்டு மாணவர்களின் தேர்வுகளுக்கும் விளக்கமே தேவையில்லை. தேடுவது மனித இயல்பு என்றாலும், தேடியது கிடைதத நிறைவும் நிம்மதியும் சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. 'என்ன தேடுகிறோம்?' என்பதே பலருக்குச் சாகும் வரை தெரிவதில்லை. பெரும்பாலானோருக்குப் பாதையே பயணமென்ற எண்ணம்; பயணமே சேருமிடம் என்ற மயக்கம். வழிகளும் செயல்களும் புரியாமலே, இலக்கு என்ற எண்ணத்தை மட்டும் விரும்புவதால் வரும் வினை எனலாம். விசுவாமித்திரன் மேனகை காலத்திலிருந்து, அதற்கும் முன்னால் (?) சிவன்-பார்வதி-மன்மதன்-சிவராத்திரி காலத்திலிருந்து, இந்த இலக்கு-விலக்கு போக்கிற்கான உதாரணங்களைப் பார்க்கலாம்.

    wandering mind, wavering mind, restless mind எனும் மூன்று நிலைகளுக்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. 'அலைபாயும்' என்று, தமிழில் எல்லாவற்றையும் பொதுவான குடையில் கொண்டு வர விரும்பவில்லை, அதனால் ஆங்கில வழக்கையே பயன்படுத்தியிருக்கிறேன்; என் தமிழறிவில் குறை, மன்னிக்கவும். wandering mind கொண்டவர்கள் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவதில்லை என்று உளவியல் மற்றும் உடல்நல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. wavering mind கொண்டவர்கள் தத்துவக் கடல்களில் முத்துக் குளிக்கிறார்கள், அல்லது சோர்ந்து போகிறார்கள். restless mind தனிக்கதை. restless mindக்கு edge உண்டு. restless mind கொண்டவர்களுக்கு ஒரு தீவிரம் உண்டு. அந்தத் தீவிரத்தை, இலக்கை நோக்கிச் செலுத்த முனையும் பொழுது ஏற்படும் இடையூறுகள், சலனங்கள் பல நேரம் அவர்களைத் தடம் மாறச் செய்கின்றன. சிலர் மட்டுமே அந்தத் தீவிரத்தைத் தக்க வைத்துக் கொண்டு தடம் புரளாமல், சாதனை மைல்கல்களைத் தாண்டிக் கொண்டே இருக்கிறார்கள். ஐன்ஸ்டைன், காந்தி, தெரசா, கேட்ஸ், சமீப CNN புகழ் நாராயணன் க்ருஷ்ணன்.. என்று பலர் இப்படி மனப்பாலம் கட்டிச் சாதனைக் கடல்களைத் தாண்டியிருக்கிறார்கள். பல venture capital, private equity நிறுவனங்கள், தாங்கள் முதலீடு செய்யும் நிறுவனங்களில் தலைமைக்குழுவின் 'restlessness quotient' அறிவதை விரும்புவார்கள் (குறிப்பாக founder, CEO போன்றவர்களின் RQ). மிலிடெரி அமைப்புகளின் தலைமையிலும் RQவை அளவிடுவதாகப் படித்திருக்கிறேன்.
    • wandering mind உள்ளவர்கள் இலக்கையே அறியாதவர்கள்; எடுப்பார் கைப்பிள்ளையின் மோசமான உதாரணம். இன்னது இலக்கு என்று கணத்துக்குக் கணம் நிலைமாறி அலைபாய்ந்து சோகத்திலேயே சோர்விலேயே வாழ்க்கையைக் கழிக்கும் அபாயத்தில் இருப்பவர்கள்
    • wavering mind உள்ளவர்கள் எளிமையானவர்கள். சராசரி மனிதம். இலக்கு தெரிந்தாலும் சுலபமாக மறந்தோ விலகியோ போகக் கூடியவர்கள். நம்மில் பெரும்பாலோர் இந்த வகையினர் என்கிறார்கள்
    • restless mind உள்ளவர்கள் இலக்கை மனதில் நிறுத்திச் சாதிக்கத் துடிப்பவர்கள். restless stateஐப் புடமிடலாம்; restless mind உள்ளவர்கள் தங்கச் சுரங்கம்.

    எத்தகைய மனநிலை பெற வேண்டும்? மூவகை மனநிலைகளும் ஒன்றுக்கொன்று சுலபமாக பின்னக்கூடியவை என்றாலும், எனக்கென்னவோ wavering கொஞ்சம் restless கொஞ்சம் கலந்தால் சுவையான வாழ்க்கை அமையும் என்று படுகிறது.

    நசிகேதன் கொண்டது எத்தகைய மனநிலை என்று எமன் சோதித்தானோ?

    ண்மையில், தன் பெருமை அழியும் நிலைக்குத் தானே காரணமாகிவிட்டதை உணர்ந்தான் எமன். தீவிரமாகச் சிந்தித்து, நசிகேதனிடம் பேச்சு வார்த்தையைத் தொடங்கினான். நயம், கொடை, அச்சம், ஒறுப்பு எனும் நான்கு முறைகளையும் கையாண்டு நசிகேதனின் மனதை மாற்றத் தீர்மானித்து, முதலில் நயத்தோடு தொடங்கினான்; பலனில்லாமல் போகவே, கொடைக்கு மாறினான்.

    பூமியிலிருந்து வந்த பிள்ளை மனித இனத்தைச் சார்ந்தவன் தானே? மனிதருக்கு இருக்கும் ஒரு பெரிய குறை, ஆசை அல்லவா? ஆசையின் காரணமாக விளையும் சபலம் தான் மனிதனின் மிகக்கொடிய பலவீனம். மன உறுதிச் சங்கிலியை உடைத்தெறியும் உளியல்லவா சபலம்? உளியைத் தாக்கும் சம்மட்டியல்லவா ஆசை? எமன் உளியையும் சம்மட்டியையும் எடுத்து, நசிகேதனின் மன உறுதியை உடைத்தெறிய முயற்சி செய்தான்.

    தேர்தல் நேர வேட்பாளர் போல் எமன் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினான். பொன்னைத் தருவேன் என்றான். மண்ணைத் தருவேன் என்றான். மாநிலத்து அரசனாக்குவேன் என்றான். கால்நடைச் சொத்துக்களைப் பெருக்குவேன் என்றான். இவற்றையெல்லாம் அனுபவிக்க பெரிய குடுமபம் வேண்டாமா? அதனால் சந்ததிகளை நூறாண்டு வாழ வைப்பேன் என்றான். நூறாண்டுகள் வாழ்ந்தால் போதுமா, வசதிகளை அனுபவிக்க வேண்டாமா? அதனால் அவர்கள் சிறப்பாக வாழ வழி செய்வேன் என்றான். இவற்றால் நசிகேதனுக்கு என்ன பயன்? அவனும் அனுபவிக்க வேண்டாமா? நசிகேதனை நூறாண்டு வாழ வைப்பதாகச் சொல்லவில்லை; ஒரு படி மேலே சென்றான். சித்திரை, தமிழாண்டின் முதல் திங்கள். நசிகேதனிடம், "ஐயா, நீ எத்தனை சித்திரைகள் வாழ நினைக்கிறாயோ, அத்தனை புத்தாண்டுகள் வாழ்வாயாக" என்றான். "காலத்தை நில் என்று சொல்லும் மாயத்தைக் கற்றுத் தருகிறேன்" என்றான்.

    எல்லாம் எதற்காக? ஒரே ஒரு ஓட்டுக்காக. பலவீனக் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டினான். வாரி வழங்கிய வள்ளல் போட்டது, ஒரே ஒரு நிபந்தனை தான்: 'மன உறுதிச் சங்கிலியை மட்டும் உடைத்துக் கொடுத்து விடு' என்பதே! "பிரிதொரு வரம் கேள், பொன்னும் பொருளும் பல்லாண்டு வாழ்வும் தருகிறேன்" என்றான். நசிகேதன் கேட்டுக் கொண்டிருந்தான்.

38 கருத்துகள்:

geetha santhanam சொன்னது…

அலைபாயும் மன நிலையை மூன்றாய் பாகுபடுத்தி விளக்கம் சொன்னது சுவை. எமன் என்ற ஆசிரியன் நசிகேதனின் மன நிலையை உறுதியை அளக்கிறான் போலும்.

சிவகுமாரன் சொன்னது…

மொதல்ல உங்க profile போட்டோ வில யாருன்னு சொல்லிடுங்க.

அப்பாதுரை சொன்னது…

வாங்க geetha santhanam, சிவகுமாரன்,...

அப்பாதுரை சொன்னது…

போட்டோவில் இருப்பது chicago bears football team விசிறி, பயப்படாதீங்க சிவகுமாரன். ரெண்டு மாசம் முன்னே நடந்த சேம்பியன்சிப் போட்டில ஜெயிக்கபோறாங்கனு அவசரப்பட்டு கொண்டாடிட்டிருந்தப்ப..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அப்பாதுரை சொன்னது… போட்டோவில் இருப்பது chicago bears football team விசிறி, பயப்படாதீங்க ...//

இந்த வின்டரில் செம்ம வெயிட் போட்டிருக்கே போலிருக்கு ? பனிப்பொழிவு நீ எடுத்தியா இல்லை வெறும் சுபெர்வைஸ் பண்ணினியா ? நான் பத்து பவுண்ட் குறைந்து இருக்கின்றேன். இன்னும் பத்து பவுண்ட் குறைக்க எண்ணம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

அலைபாயும் மனநிலைக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு அழகான மூன்று இருந்து தமிழில் ஒன்று தான் கண்டுபிடிக்கமுடிந்ததா ? அதுவும் உங்களை போல் தமிழ் அறிந்தவருக்கு. குப்புற படுத்து யோசிக்கறேன் நினைவுக்கு வந்தா எழுதறேன்.

என் ப்ளாகில் "என் புதிய ஆத்திசூடி" படித்தீர்களா ?

நிறைய பேர் பாராட்டினார்கள்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

ரொம்ப சிம்பிளான வெண்பாவில் ஸபல மழையே கொண்டுவந்திருக்கெறெர்க்கள். ஆஸ்தி, பூஸ்தி, சிரஞ்சீவித்வம் அத்தனையும் கண்ணெதிரே காட்டினா மயங்காதவர் உண்டோ? சம்ஸ்க்ருத ஸ்லோகப் பொருள் மாற்றாமல் எளிய தமிழில் வெண்பா ரொம்ப ரசிக்கும்படி இருக்கிறது. பூணிகாணி நல்ல செலக்ஷன்.

தடுமாறும், அலைபாயும், ஆறாத என்று மூன்று நிலைகளை தமிழில் சொல்லலாம். English words are more appealing for you?

Santhini சொன்னது…

/////சிக்கல் துறப்பதில் அல்ல. துறப்பது மிகச் சுலபம் என்று நினைக்கிறேன். துறந்தபின் அடையாளங்கள் தொலைந்தன என்று நினைப்பது, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அறியாமை என்றும் நினைக்கிறேன். //////

அப்பாதுரை, எது சிக்கல் எது சுலபம் என்ற கவலை உங்களுக்கு எதற்கு? அடையாளங்களை தொலைப்பது என்றால் என்ன? அடையாளங்கள் இருக்கிறதா அல்லது தொலைந்ததா என்ற நிலை குறித்த கவலை எதற்கு? நம்மை நாம் ஏமாற்றும் அறியாமை என்ற நிலை குறித்த கவலை ஏன்? அறியாமை இருந்தால் என்ன ? அல்லது அதை அறியும் அறிவு இருந்தால் தான் என்ன ? ...........அறிவுக்கப்பால், அறியாமைகளுக்கப்பால், வரையரைகளுக்கப்பால், அடையாளங்களுக்கப்பால், உங்கள் உலகின் சுவாரச்யங்களுக்கப்பால் இருக்கும் உலகம் இது. இங்கு கருத்துகள் இல்லை , வரையறைகள் இல்லை, அறிவின் மேதமை பேதம் இல்லை, அறியாமையின் இருள் இல்லை, பயம் இல்லை.
நாடகத்தில் நடிப்பவனுக்கு இருக்கும் ஆட்ட சுவாரஸ்யம் பார்ப்பவனுக்கு இல்லை என்பது போன்ற வாதம் உங்களுடையது. இரண்டும் வேறுபட்டது. ஆட்டம் பார்ப்பவன் முழுமையான நாடகம் பார்க்கிறான். நடிப்பவன் அதன் ஒரு துண்டத்தின் முழு தாக்கத்திலும் , முழுமை கொள்கிறான். ஒரு நல்ல நடிகனே அந்த முழுமையை உணர்கிறான். நாம் ஒரு நல்ல நடிகனாக இருக்க வேண்டும் அல்லது ஆட்டம் பார்க்கும் கண்களாக மாறவேண்டும். நாமெல்லாரும் இரண்டும் கெட்டானாக இருந்து விடுகிறோம்.

நீங்கள் எங்கு இருக்க விரும்புகிறீர்கள்? ஆட்டத்தை வெளியிலிருந்து பார்த்து பழகிவிட்டு, ஆட்டத்தை ஆட உள்ளே வந்த நடிகனைப் போன்ற நிலை என்னுடையது. உள்ளும் புறமும் அறிந்த நிலை. அது தெளிவு தருகிறது. கேள்விகள் இல்லாமல் ஆக்குகிறது. நான் நிற்கும் இடம் எது, எங்கு நகர்கிறேன், எதை நோக்கி நகர்கிறேன், என் பேச்சும் செயலும் என்னை என்ன செய்யும் செய்யாது, என்பதெல்லாம் புரிந்த நிலை அது.

அடையாளங்களை துறத்தல் என்பது.......மனது தன்னை இன்னாராக கற்பித்துக்கொள்ளும் நிலையை கலைப்பதே. பாத்தி கட்டாத வயல் போல. கலைத்து போட்ட சீட்டு கட்டு போல , எண்ணங்களை வகைபடுத்தாமல் ......அப்படியே கலைத்து போடுங்கள்? நீங்கள் யார் என்ற கேள்விக்கு , யாராயிருந்தால் என்ன வென்று பதில் சொல்லி பாருங்கள். அந்த பதில் உங்களை இந்த பிரபஞ்சத்தில் எங்கு நிறுத்துகிறது என்பதை உணர்ந்து பாருங்கள். பிறகு கேள்விகளும் பதில்களும் உங்களை எங்கே எடுத்து செல்கின்றன என கவனியுங்கள்.

அப்பாதுரை......இது விவாத பொருளல்ல. விவாத களமும் அல்ல . உண்மை என்பது ஒன்றுதான். அதை பார்க்க கண்களை திறந்தாக வேண்டும். கண்ணை திறப்பதற்கு முன்பாகவே, இங்கே முள்ளிருக்கிறதா, மெத்தை இருக்கிறதா, பூவிருக்கிறதா என்று நிறைய கேள்விகள் வருகிறது. நசிகேத வெண்பா எழுத துணிந்த உங்களுக்கு இந்து மதத்தின் பல்வேறு நூல்கள் சொன்ன சாரம் தெரிந்திருக்கும். விஷயம் எல்லாம் ஒன்றே.

டிவி யில் விளையாட்டு மட்டுமே பார்க்கும் மனநிலையில் இருக்கிறீர்கள். இறங்கி ஆட, உங்களிடம் ......என்ன இல்லை என்று யோசியுங்கள். இறங்கி ஆடினால்தான் தெரியும், பந்து எதை நோக்கி வருகிறது, அதை எப்படி அடிப்பது? என்ன மாதிரியான பலம் தேவை என்பதெல்லாம் .....களத்தில் இறங்கினால் மட்டுமே தெரியும். நீங்கள் இறங்க தயார் ஆகும்போது ( அப்போது நான் அறிவேன்) .....மேலும் தொடரலாம்.

Santhini சொன்னது…

கடோபநிஷத் தை எழுதிய ஆசிரியர் ஏன் மரணம் பற்றிய அறிவு குறித்த கேள்வி எழுப்ப, நசிகேதன் என்ற சிறுவயது பாத்திரத்தை தேர்ந்தெடுத்தார்?

ராமசுப்ரமணியன் சொன்னது…

Brilliant Nanum Sir!

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! பின்னுட்டங்கள் மிகவும் உயர்ந்த தளத்திற்கு நம்மை இட்டுச்செல்கின்றன.அதிகாலை எழுந்து ,தாமிர வருணியில் குளித்து,மடி சஞ்சியிலிருந்து உலர்ந்த துணிகளை உடுத்திக்கொண்டு தாத்தா ஜபம் பண்ணுவார். அதுபோல தினம் உம்முடைய இடுகைக்கான பின்னூட்டங்களை பாராயணம் பண்ணூ கிறேன். "நானும் என் கடவுளும்" பின்னி எடுக்கிறார். எங்கே அழைகிறார் என்பது புரிய நாளாகும். அது சரி! அகன்ற வாய், பரந்த நெற்றி, கூர்மையான மூக்கு,அறி வொளீ வீசும் முகம் அது அப்பாதுரை அவர்கள் தானே! ---காஸ்யபன்

சிவகுமாரன் சொன்னது…

Wandering mind-நிலையில்லா மனது
Waving mind-அலைபாயும் மனது
Restless mind-அமைதியிலா மனது .
-பொருந்துகிறதா துரை?
போட்டோவில் நான் எதிர்பார்த்ததை விட இளமையாக இருக்கிறீர்கள்.
நானும் கால்பந்து ரசிகன் ( எனக்கு கிரிக்கெட் பிடிக்காது. தெரியாது)
கால்பந்து என்றால் பேர் தெரியாத அணி என்றால் கூட பார்ப்பேன். பிரேசில் அணி என் favourite .

geetha santhanam சொன்னது…

//ஆஸ்தி, பூஸ்தி, சிரஞ்சீவித்வம் அத்தனையும் கண்ணெதிரே காட்டினா மயங்காதவர் உண்டோ?//
மார்கண்டேயனின் பெற்றோர்கள் எடுத்த முடிவு, நினைத்த போதுதான் மரணம் என்ற வர்ம் பெற்ற பின்னும் பீஷ்மரின் அமைதியற்ற வாழ்வு இவை நீண்ட ஆயுள் வரத்தின் பயனற்ற நிலையைக் காட்டும் (எனக்கு கடோவின் காலம் இவற்றிற்கு முன்னரா பின்னதா என்று தெரியாது).
நசிகேதனின் சந்ததிக்கும் நீண்ட,திருப்தியான, சிறப்பான வாழ்க்கை என்ற வரம் அளிக்க முயல்வதில் எமன் தன் எல்லையை மீறுகிறாரோ (எமனுடைய கட்டுப்பாட்டில் மட்டும் இல்லாத ஒன்று) என்ற எண்ணம் நசிகேதனுக்கு வந்திருக்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

வருக சாய், ராமசுப்ரமணியன், Nanum enn Kadavulum, kashyapan,...

அப்பாதுரை சொன்னது…

பிரமிக்க வைக்கும் பின்னூட்டம், Nanum enn Kadavulum. "அடையாளங்களை துறத்தல் என்பது.." என்று வரும் paraவை பலமுறை படித்தேன். நான் எங்கே இருக்க விரும்புகிறேன் என்ற கேள்விக்கான விடையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் தெரிந்து கொண்டேன்; அதற்குப் பிறகு இன்றுவரை கண் மூடவில்லை, வேறு விடையும் தேடவில்லை. பத்து வருடங்களாக அதுவே சரியான விடையென்று அவ்வப்போது தீர்மானிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இன்றைக்கு நீங்கள் கேட்டதும் மறுபடி விடைப்பெட்டிக்குள் சென்று பார்த்தேன்; மாறவில்லை. மறுபடி பெட்டிக்குள் போட்டு வந்து விட்டேன் (ஏன்? என்பதே என்னை நான் கேட்கும் கேள்வி). சுயதேடலை விரும்பும் ஒவ்வொருவரும் கேட்டு உணர்ந்து கொள்ள வேண்டியது என்று நினைக்கிறேன். தட்டி எழுப்பினீர்கள்; நன்றி.

அப்பாதுரை சொன்னது…

நல்ல கேள்வி, Nanum. கடோவில் சிறுவனைத் தேர்ந்தெடுத்தது வெளிப்படையான காரணம் என்று நினைக்கிறேன். அடையாளங்களில் சிக்கும் முன்னரே அடையாள்ம் பற்றிய போதனையை பெற்றால் நன்று என்பது ஒரு காரணம். வாழ்க்கையைத் தொடங்கும் போது பெற வேண்டிய அறிவு. இன்னொரு காரணம் என்னுடைய interpretation. நசிகேதனே கேட்டு எமன் சொல்வதாகக் கடைசி பகுதியில் எழுத நினைக்கிறேன் (முற்றும் போட்டு விட்டால் கொடி பிடிப்பவர்கள் ஒன்றும் செய்ய முடியாது பாருங்கள் :)

கடோவை எழுதியவர் ஒரு சிறுமியையோ பெண்ணையோ ஏன் மையமாக வைக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்? runs deep, i think.

என் அறிவுக்கு எட்டிய வரையில் கடோவும் அடிக்கடி கண்மூடச் சொல்கிறது, Nanum; அதில் எனக்கு உடன்பாடில்லை. கடோவின் சாரம் நீங்கள் தெளிவாகச் சொல்வது போல் கண்ணைத் திறந்து 'from ringside to inside' தாவச் சொல்கிறது; அதே நேரம் தாவும் பொழுது கண்ணை மூடிக் கொள்ளச் சொல்வதை எண்ணி வியக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

சரியாகச் சொன்னீர்கள் காஸ்யபன்! 'நானும் என் கடவுளும்' பின்னும் வேகம் பிரமிக்க வைக்கிறது.

நீங்களும் தாமிரவருணி வளர்ப்பா? நான் இன்னும் அந்தப்பக்கம் வந்ததில்லை. என் தாத்தா பாட்டிகளின் பெருமைகளில் தா.வ ஒன்று. பார்த்தாக வேண்டும்; bucket listல் சேர்த்திருக்கிறேன்.

நாலில் ஒன்று சரி; அகன்ற வாய். நன்றி சார்!

அப்பாதுரை சொன்னது…

தமிழ்ச் சொற்களுக்கு நன்றி ராமசுப்ரமணியன், சிவகுமாரன். restless பொருந்தவில்லை என்று தோன்றுகிறது. ஆறாத, அமைதியிலா இரண்டும் 'restless' தவிர்க்க வேண்டிய நிலை என்ற பொருளில் வருவது போல் தோன்றுகிறது. 'விழிப்போடு செயலார்வம் சேர்ந்த அமைதியிலா நிலை' என்பதற்குத் தனிச்சொல் உண்டா சொல்லுங்களேன்?

இன்னொரு இடத்திலும் திண்டாடுகிறேன் - பின்னால் ஒரு பாடலில் தெரியும் (ஒரு இடத்திலா.. சரிதான்!). 'life is Short' எனும் adage, shakespeare சொன்னதாகக் கருதப்படுகிறது. வடமொழியில் shakespeareக்கு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் 'ஜீவிதம் அல்பம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதே அதே சபாபதே! ஆங்கிலமும் வடமொழியும் போல் எளிமையாக, yet packing punch, ஒன்றிரண்டு சொற்களில் 'life is short' என்பதற்கு தமிழில் உண்டா சொல்லுங்களேன்?

தமிழின் தொன்மையைப் பார்க்கும் பொழுது, பிற சமகால மொழிகளான சம்ஸ்க்ருதம், லேடின்... ரொம்ப சமீபகால ஆங்கிலம்... ஒப்பிடுகையில், தமிழில் ஆழம் உள்ள அளவுக்கு அகலம் இல்லையோ என்று சில சமயம் தோன்றும். எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்பதும் சரியே.

அப்பாதுரை சொன்னது…

எமன் எல்லை மீறுகிறானோ என்ற சந்தேகம் நசிகேதனுக்கு வந்திருக்கலாம். அப்படியே எமன் வழங்கினாலும் முகமறியாத இன்னொருவருக்காகத் தான் வரம் பெறுவதும் எல்லை மீறுவதாகும் என்றும் நசிகேதன் சந்தேகப் பட்டிருக்கலாம். good insight, geetha santhanam!

மோகன்ஜி சொன்னது…

'life is short' -நீரெழுத்து வாழ்க்கை

Santhini சொன்னது…

அப்பாதுரை,

/////இந்தப் பயிற்சி எங்காவது கிடைக்குமா தெரியவில்லை - நானும் வருடக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கிறேன். prisoner of ideaவாக வாழ்க்கையைக் கழிக்காமலிருக்க நினைக்கிறேன்...பெருமூச்சு!////////

இந்த தேடலையும், பெருமூச்சையும் கண்டே நான் உதவி செய்யும் பொருட்டு எழுத துவங்கியது.


//////நான் எங்கே இருக்க விரும்புகிறேன் என்ற கேள்விக்கான விடையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் தெரிந்து கொண்டேன்; அதற்குப் பிறகு இன்றுவரை கண் மூடவில்லை, வேறு விடையும் தேடவில்லை. பத்து வருடங்களாக அதுவே சரியான விடையென்று அவ்வப்போது தீர்மானிக்க வாய்ப்பும் கிடைத்து வருகிறது. இன்றைக்கு நீங்கள் கேட்டதும் மறுபடி விடைப்பெட்டிக்குள் சென்று பார்த்தேன்; மாறவில்லை./////////

ஆனால் .........நீங்கள் எங்கே இருக்க விரும்புகிறீர்கள் என்பதும், எங்கே இருக்கிறீர்கள் என்பதையும் நீங்கள் அறிந்தே வந்துள்ளமையாளும், அந்நிலையில் திருப்தி உள்ளதாகவும் உங்கள் வார்த்தைகள் தெரிவிக்கின்றன. ஆயின் மேற்கண்ட திருப்தி நிலையும் , மீண்ட தேடலும் பெருமூச்சும் .....முரண் தருகிறது. உங்களை புரிதலில் தவறுகிறேனா அல்லது உங்களது வார்த்தைகள் சரியாக உங்களை வெளிப்படுத்தவில்லையா? முடிந்தால் தெரிவிக்கவும். உங்களுக்கு திருப்தி நிலை உண்டாயின், நான் தொடர வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. தேடல் உண்டாயின் .....சரியான கேள்விகள் மூலம் மீண்டும் தொடரலாம். தெளிவு படுத்தவும்.

//////(ஏன்? என்பதே என்னை நான் கேட்கும் கேள்வி).///////
இந்த இடத்திலும் மீண்டும் முரண் உருவாகிறது. திருப்தியான நிலை இருக்கும்போது மீண்டும் ஏன் என்ற கேள்வியின் அவசியம்???


அடுத்து ......நசிகேதனின் .....தேர்ந்தெடுத்த சிறுவ பருவம் குறித்த என் கேள்வியின் உங்கள் பதில் சரியானதே. பிறிதொரு பார்வையில் வேறு சில பதில்களும் உண்டு. ஆனால் அந்த பதில்கள் , கவியின் கவித்துவத்தை வெறுமையாக்கிவிடும் அபாயம் இருப்பதால் இங்கு அது குறித்து பேச வேண்டாம். மற்ற படி ஏன் சிறுமியோ , பெண்ணோ இல்லை என்ற கேள்வியெல்லாம் எனக்கில்லை. வேத கால தலைவன் வழி சார்ந்த கால கட்டத்தின், இயல்பு அது. அதை மறுத்து அந்த நிலையில் பெண்ணியம் பேசும் அவசியம் அப்போது இல்லை. தாய் வழி சமூகமோ அன்றி தந்தை வழி சமூகமோ, எதுவாயினும் அந்தந்த காலத்தின் கட்டாயங்களுக்கு மற்றும் தேவைகளுக்கேற்பவே இயங்கியுள்ளன. அதை அது வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் justifying நோக்கம் தேவையில்லை என கருதுகிறேன். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. (பிரபஞ்சத்தின் தேவைக்கேற்ப ......மனிதனின் தேவைக்கேற்ப அல்ல)
--

Santhini சொன்னது…

இந்த கண்மூடல் மற்றும் கண் திறத்தல் குறித்து விரிவாய் பிறகு பேசுவோம். ஒன்றுமே இல்லாததை உலக மகா ரகசியமாய், வேதம், உபநிஷத், கீதை என்று எல்லாமும்.....வழி வந்த மக்களும் விலாவாரியாய் பேசியதில் ........நாம் கண்முன் இருக்கும் உண்மையை காணும் ஆற்றலை இழந்துவிட்டோம்.
கண்முன் இருக்கிறது உண்மை. எந்த குருவும், எந்த நூலும், எந்த மதமும் இதை காட்ட முடிவதில்லை. எப்படி திறப்பது என்பதுதான் சூட்சுமம். திறந்தபின் எப்படியெல்லாம் தேடி வீண் செய்துள்ளோம் நேரத்தை என்றுதான் தோன்றும். மொழிகளும், கவிகளும், தேடல்களும் ..........இன்னும் இன்னும் எல்லாமும் அர்த்தம் மாறிப் போகும். தெளிவைத் தவிர மனதுள் எதுவும் இல்லாது போகும்.

Santhini சொன்னது…

நீர்க்குமிழ் வாழ்வு , குமிழி வாழ்க்கை ----------life is short

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

"நீர்க்கோல வாழ்வை நச்சி
நெடிது நாள் வளர்த்துப் பின்னை
போர்க்கோலம் செய்து விட்டார்க்கு
உயிர்கொடாது அங்கு போகேன்"
- என்று கும்பகர்ணன் சொல்வதாக கம்பன் சொல்வார்.

meenakshi சொன்னது…

வெண்பாவும், விளக்கமும் அற்புதம்!
//'விழிப்போடு செயலார்வம் சேர்ந்த அமைதியிலா நிலை'// அருமை! இது ஒரு தவிக்கும், துடிக்கும் நிலை. வழி கிடைத்த பின் நுழைய துடிக்கும் ஒரு மனதின் நிலை இது என்று சொல்லாமா, அப்பாதுரை! இதற்கு ஒரு சரியான தமிழ் வார்த்தை கிடைத்து விட்டால் தயவு செய்து பதிவுடுங்கள்.
//வழிகளும் செயல்களும் புரியாமலே, இலக்கு என்ற எண்ணத்தை மட்டும் விரும்புவதால் வரும் வினை எனலாம்.// பிரமாதம்!
நசிகேதன் கதையோடு கூடிய இது போன்ற விளக்கங்கள் பதிவுகளை இன்னும் மெருகேற்றுகிறது.

'நானும்' அவர்களின் பின்னூட்டங்கள் அசத்துகிறது, மனதையும் அசைக்கிறது. வாழ்த்துக்கள்! 'அப்பாதுரையும், நானும்' என்று தலைப்பிட்டு இதை ஒரு தனி பதிவாகவே போடலாம் என்றே தோன்றுகிறது.

RVS சொன்னது…

மனசு அலைபாயுதே! பின்னூட்டத்துல பெரியவர்கள் ரொம்ப பேசிட்டாங்க.. படிச்சு முடிச்சதும் ஒரே கேரா இருக்கு.. நான் இப்போ தூங்கப் போறேன். நன்றி. ;-))

ஸ்ரீராம். சொன்னது…

படித்து வருகிறேன். (பின்னூட்டம் போடாததால் இந்தப் பக்கம் வரவே இல்லை என்று எண்ணி விடக் கூடாதே..) பிரமிப்பாக இருக்கிறது. புரியாத விஷயங்களைப் பார்க்கும்போது பேசாமல் எதையும் யோசிக்காமல் 'வாழ்ந்து' விட்டு போய் விடலாம் என்றும் தோன்றுகிறது!

பெயரில்லா சொன்னது…

//chicago bears football team விசிறி// :) செம

//அலைபாயும் மனநிலைக்கு ஆங்கிலத்தில் அவ்வளவு அழகான மூன்று இருந்து தமிழில் ஒன்று தான் கண்டுபிடிக்கமுடிந்ததா ? // :)

என் ப்ளாகில் "என் புதிய ஆத்திசூடி" படித்தீர்களா ?//
வாத்தியாரு சொல்லிக்கொடுத்தாருங்க சார், நானும் படிச்சேங்க சார்.

//இங்கு கருத்துகள் இல்லை , வரையறைகள் இல்லை, அறிவின் மேதமை பேதம் இல்லை, அறியாமையின் இருள் இல்லை, பயம் இல்லை. //
எங்களுக்கு இடமும் இல்லையா? :)

//நாமெல்லாரும் இரண்டும் கெட்டானாக இருந்து விடுகிறோம். //
உண்மையே சார்.

//என்ன இல்லை என்று யோசியுங்கள்.//
நானா இருந்தா சடார்னு சொல்லுவேன். முறையான சப்போர்ட் இல்லை. திறமை இருந்தாலும் பலருக்கு களமிறங்கி விளையாட சரியான, murayaana வாய்ப்பு அளிக்கபடுவதில்லை. எல்லா இடத்திலும் சுயநலம் இருக்கத்தான் செய்கின்றது சார். உமி, அரிசி இரண்டையும் கலந்து.., சரி விடுங்க.

//நசிகேதன் என்ற சிறுவயது பாத்திரத்தை// காண, வாழ அவனுக்கு நிறைய இருக்கின்றது என இருக்கலாம்.

Arinthu valaravaa?

//நானும் கால்பந்து ரசிகன்//uthithu vilayaada, saringala :)

Meenakshi Paatti, nengalum "Ayaraatha manathodu" inge karuthurai sollugindrergal.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//ஸ்ரீராம். சொன்னது… புரியாத விஷயங்களைப் பார்க்கும்போது பேசாமல் எதையும் யோசிக்காமல் 'வாழ்ந்து' விட்டு போய் விடலாம் என்றும் தோன்றுகிறது!//

நான் சொல்லவில்லை - என்னில் பாதி பெயர் கொண்ட நீர் உண்மையை உரைத்துவிட்டீர் !! மனதார சிரித்தேன் ஸ்ரீராம். (மோஹி போதுமா ! நிறைய சிரிப்பு சிரித்தவன் நான் !)

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! ஸ்ரீராமின் கருத்தை ரொம்ப நேரமாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு சுலபமாக சொல்லிவிட்டார்?
அற்புதம்.தத்துவங்களும்,வேதாந்தமும்,இருப்பும் இறப்பும் ஏன் புத்தி கூட சுமையாகத்தான் ஆகிவருகிறதோ?? எளிமையும், அறியாமையும் கூட வரமாயும்,கத்திபோன்ற புத்தி சாபமாயும் அமைவதில்லையா..

ஸ்ரீராம்!உம்மை வலைச்சித்தர் என்று அழைக்கத் தோன்றுகிறது!

Santhini சொன்னது…

ஸ்ரீ ராம் நீங்கள் சொன்னது மிகவும் சரி. எதையும் யோசிக்காமல் " வாழ்ந்து" மட்டும் போய் விடுவதே சரியானது. ஆனால் ......இந்த மூளையுள்ள ஆராய்ச்சி அறிவும், படிப்பறிவும் கொண்ட மேதைகள் என நினைத்துக் கொள்கிற நாமெல்லோரும், சிறு வயதிலிருந்து நமக்குள் திணித்துக் கொண்ட கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளால் ....."வாழ்வது என்றால் என்ன? " என்பதிலிருந்து விலகி விடுகிறோம். அப்படி திணிக்கப்பட்ட, கரு குலைப்பு செய்யப்பட்ட கருத்துகளை, நம்மிலிருந்து விலக்கிவிட்டுத்தான் ......இப்போது நாம் "வாழ்வதை" கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பிறந்ததிலிருந்து நம்மேல் எத்தனை சுமைகள் சுமத்தப்பட்டு விடுகிறது?? ......
யோசிக்காமல் ....சுலபமாய் ....வாழ்வது ...ஏன் கடினப் பட்டு போய்விட்டது???

வால்பையன் சொன்னது…

ஆட்டத்தில் இறங்கும் திறன் வளர்த்து கொள்ளும் நோக்கில் வேடிக்கை பார்க்கிறேன், இங்கு நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதை!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//Nanum enn Kadavulum... சொன்னது…
ஸ்ரீ ராம் நீங்கள் சொன்னது மிகவும் சரி. எதையும் யோசிக்காமல் " வாழ்ந்து" மட்டும் போய் விடுவதே சரியானது. ஆனால் ......இந்த மூளையுள்ள ஆராய்ச்சி அறிவும், படிப்பறிவும் கொண்ட மேதைகள் என நினைத்துக் கொள்கிற நாமெல்லோரும், சிறு வயதிலிருந்து நமக்குள் திணித்துக் கொண்ட கருத்துக்கள் மற்றும் சிந்தனைகளால் ....."வாழ்வது என்றால் என்ன? " என்பதிலிருந்து விலகி விடுகிறோம். அப்படி திணிக்கப்பட்ட, கரு குலைப்பு செய்யப்பட்ட கருத்துகளை, நம்மிலிருந்து விலக்கிவிட்டுத்தான் ......இப்போது நாம் "வாழ்வதை" கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. பிறந்ததிலிருந்து நம்மேல் எத்தனை சுமைகள் சுமத்தப்பட்டு விடுகிறது?? ......
யோசிக்காமல் ....சுலபமாய் ....வாழ்வது ...ஏன் கடினப் பட்டு போய்விட்டது???//

அப்பாடி, இது புரிந்துவிட்டது.

நீங்கள் சொல்லுவது எத்துனை உண்மை. நமக்கு திணித்தது போதாது என்று இப்போது நான் என் பிள்ளைகளுக்கு ? சக்கரம் போல்

சிவகுமாரன் சொன்னது…

என்ன துரை... .அஞ்சாறு நாளாய் ஆளைக் காணோம். நலந்தானே ?

அப்பாதுரை சொன்னது…

வாங்க மோகன்ஜி, RVS, ஸ்ரீராம், வால்பையன்,...

அப்பாதுரை சொன்னது…

நன்றி Nanum enn Kadavulum.. திருப்தி பற்றிய உங்கள் கண்ணோட்டம் எனக்குப் புரிந்தாலும், சில கேள்விகள் தோன்றுகின்றன. விரிவாக எழுத நினைத்தாலும் எதிரே கடிகாரம் முறைக்கிறது. பிறகு எழுதுகிறேன்.

திருப்தி என்பது என் கைக்குள் இருப்பதாக நினைக்கிறேன். திருப்தி அடைவதற்கும் தேடல்களைத் தொடர்வதற்கும் தொடர்பு உண்டா - அல்லது என்னுடைய பலவீனமா? 'இன்னும் கொஞ்சம்' என்பதே என் வாழ்வின் குறிக்கோளாக இருப்பதை உணர்ந்து பதினைந்து வருடங்கள் போலாகிறது. அப்படியே தொடர்ந்தும் வருகிறேன். திருப்தியும் குறைந்ததாகத் தெரியவில்லை. paradox or plain madness, don't know. நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டுகிறேன்.

காலகட்ட வழக்கம் பற்றிய உங்கள் கருத்தை ஏற்கிறேன். பெண்ணியம் என்ற காரணத்தால் கேட்கவில்லை - அனாவசியமாக பெண்ணியத்தை இழுக்கும் நோக்கமில்லை. பெரும்பாலான கருத்துக்கள் 'மனிதம்' என்ற பொதுக் கண்ணோட்டத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் சில இடங்களில் ஆண் மற்றும் 'தகுதியுடையோர்' என்று வருவதைக் கவனித்தேன். அதற்குக் காரணம் இருப்பதாகவும் நினைக்கிறேன். பிறகு எழுதுகிறேன்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது... நாம் ஒரு நாள் தொலைபேச வேண்டும். :)

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராம்.. எத்தனை எளிமையாகச் சொல்லிவிட்டீர்கள்! சபாஷ்!