வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2012/04/05

நூற்பயன், நன்றி


நசிகேத நூலிது நன்னெறிக் கேணி
பசித்தவர்க்கு அன்னமழை போன்றாம் - உசிப்பொருளை
தப்பா துரைத்தேன் இருதாய்க்கும் ஏனோர்க்கும்
அப்பா துரையின் அகம்.

   சிகேதன் கதையை விளக்கும் இந்நூல், நெறிகளுக்கான ஊற்று. பசித்தோர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. மெய்யறிவின் நுண்மையைப் பிறழாது சொல்லியிருக்கிறேன். என்னைப் பெற்ற இரண்டு தாய்களுக்கும், (தொடர்ந்து படித்த) அனைவருக்கும் (இந்த) அப்பாதுரையின் ஆன்மாவில் பங்குண்டு.


உசிப்பொருள்: நுட்பம், மெய்யறிவு
அகம்: ஆன்மா, மனம், உயிர்



    சிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது. நசிகேதன்-எமனுடனான உரையாடலைப் பல முறை படித்துப் பயனடையலாம். அவையோர் முன் நசிகேதன் உரைத்தது எமனிடம் அவன் பெற்ற அறிவின் சாரம். மரணம் பற்றிய அறியாமையையும் அவை தொட்டக் கண்மூடித்தனங்களையும் ஒழிக்க நசிகேத வெண்பா ஒரு அறிவுக்கருவி. மெய்யறிவுக்கானத் திறவுகோல்.

கடோபனிஷது நூலில் நான் கற்ற மெய்யறிவின் நுண்மையினை, நசிகேத வெண்பா எனும் இத்தமிழ் நூலின் வழியாகப் பிழையில்லாது எடுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று நம்புகிறேன்.

என்னைப் பெற்றெடுத்த என் தாய்க்கும் தமிழுக்கும், தளராமல் என்னுடன் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பயணித்த உங்கள் அனைவருக்கும், நன்றி.

தொடர்ந்த வாசிப்புக்கும் ஆதரவுக்கும், சுவையாகச் சிந்திக்க வைத்த அறிவார்ந்த பின்னூட்டக் கலந்துரையாடலுக்கும், கடன் பட்டிருக்கிறேன். வற்றாத நன்றிப் புனலை உங்கள் முன்வைத்து அவையடங்கி விடைபெறுகிறேன்.

தாயையும் தமிழையும் போலவே, என் ஆசான்களுக்கும், உங்களுக்கும் என் உயிரில் இடமுண்டு. ஆன்மாவில் பங்குண்டு.

தமிழ் வாழும் நல்லுலகெங்கும் அமைதி நிலவட்டும்.


//நசிகேத வெண்பா நிறைவுற்றது//


27 கருத்துகள்:

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே ! மிக வும் அற்புதமான பணியினை செய்து முடித்துள்ளீர்கள். உடன டியாக நூலினை தொகுத்து சீர் செய்து புத்தகமாக கொண்டுவரவேண்டும் .விருதுகளைப் பெறவெண்டும் என்று வாழ்த்துகிறேன்.அன்புடன் ---காஸ்யபன்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நசிகேத வெண்பாவை நான் அவ்வப்போது படித்து வந்தாலும் தற்போதுதான் முதல் பதிவிலிருந்து படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பல தத்துவங்களை உள்ளடக்கியதாக இது அமைந்திருக்கிறது என்பதை பின்னூட்டங்கள் மூலம் அறியமுடிகிறது.மரணம் பற்றிய ஆழமான கருத்துக்களை அறிந்துகொள்ளும் விதமாக தாங்கள் செய்த அரிய பணி பாராட்டுக்குரியது.முழுவதும் படித்துவிட்டு மீண்டும் கருத்திட வருவேன்.

பெயரில்லா சொன்னது…

// நசிகேத வெண்பா மனித நேயத்தையும் நெறிகளையும் விளக்கும் வற்றாத நீரூற்று போன்றது. பசித்துக் கிடப்போர் மேல் பொழியும் அன்னமழை போன்றது.//
'பசித்து கிடப்போர் மேல் அன்னமழை' பிரமாதம்! வானம் பார்த்த பூமியின் மேல் மழை வெள்ளம் போல், பசித்து கிடப்போர் மேல் அன்னமழை. அருமையாக இருக்கிறது.

இந்த பதிவு இன்றோடு முடிந்து விட்டதே என்று சற்று வருத்தமாகத்தான் இருக்கிறது. இந்த பகுதியில் உங்கள் விளக்கங்கள் எல்லாம் அழகான உதாரணங்களுடனும், அற்புதமான கதைகளுடனும் படிக்க சுவாரசியமாகவும், பயனுடையதாகவும் இருந்தது. பதிவு முடிந்துவிட்டாலும் மீண்டும் ஒரு முறை நிதானமாக முதலில் இருந்து படிக்க எண்ணியுள்ளேன். நன்றி!

உங்கள் தமிழ் தொண்டு மிகவும் நன்று! இது இன்னும் தொடர வாழ்த்துக்கள்!

bandhu சொன்னது…

இந்த அற்புதமான பணியை சிறப்பாக செய்தீர்கள். மேலும் மேலும் படிக்க தூண்டியபடி இருக்கிறது உங்கள் எழுத்து. பிரமாதம்.

பத்மநாபன் சொன்னது…

கடைசியில் தொடர்ந்து வந்து பின்னூட்டம் இட முடியாவிட்டாலும், அனுபவித்து மீண்டும் மீண்டும் படிக்க வைத்த தொடர்...

முதலில் அழகான வெண்பா...அறிந்த சொற்கள் ...அறியாத சொற்களுக்கு அருஞ்சொற்பொருள்... தலையங்கம்...குட்டிக்கதைகள்..மேலாண்மை வாக்கியங்கள்... பிரசங்கமாய் செய்திகள் ... இப்படி ஒரு நெறியான அமைப்புடன் தொடர்ந்து இருவருடங்கள் உண்மையில் தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஒரு பொக்கிஷமாய் அமைந்தது நசிகேத வெண்பா..

நன்றியும் வாழ்த்துகளும்...

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

படித்தேன்! சுவைத்தேன்! பழச்சாற்றில்ஊறும்
படித்-தேன் எனநான் ருசித்தேன்!-வடித்தேன்
கவிதை உமைப்போல் கருதியே ! வெட்கித்
தவித்தேன் மனம்தோற்றுத் தான்.

சிவகுமாரன் சொன்னது…

முப்பால் குறள்போல முத்தமிழ் அன்னைக்கு
அப்பாத் துரையின் அருந்தொண்டு - எப்போதும்
நின்று நிலைக்கும்! நினைவில் விலகாது
என்றும் இருக்கும் இனி.

அப்பாதுரை சொன்னது…

பயணம் மற்றும் injury காரணமாக என்னால் பதிலெழுத முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

அனைவருக்கும் என் பணிவான நன்றி. பின்னுரையில் சந்திப்போம்.

Unknown சொன்னது…

மேலே உள்ள வாசகர்கள் சொன்னது போல, (1) இது நூலாக வெளிவர வேண்டும். உங்கள் முயற்சி அருமையா இருக்கு! (2) இது முடியுதே என்று வருத்தமா இருக்கு!

தொடர்ந்து பின்னூட்டம் போடலைனாலும், ரீடரில் இணைத்துப்படித்தேன். உங்கள் அரிய முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்.

ராமசுப்ரமணியன் சொன்னது…

கேள்விப்பட்டேன். Wish you feel better. சும்மா கிடந்த சங்கு ஞாபகம் இருக்கா? :-)))))

But first, a big of congratulations. ரொம்ப பொறுமையா அருமையா எழுதி முடிச்சதுக்கு. அரசனும் வேதாவும் ரொம்பப் பெருமைப் படுவாங்க. I am proud of you also.

சிவகுமாரன் சொன்னது…

ஞாலம் மறந்த நசிகேதன் காவியம்
காலத்தை வெல்லும் கருத்தோடு- சாலச்
சிறந்திட வெண்பாவில் செய்தமிழ்த் தொண்டை
மறந்திடக் கூடுமோ மண் ?

ஸ்ரீராம். சொன்னது…

உங்கள் எழுத்துப் பணியில் மிகப் பெரிய பணி இது. வாழ்த்துகள். சீக்கிரம் புத்தகமாக எதிர்பார்ப்புகளும், வாழ்த்துகளும்.

அப்பாதுரை சொன்னது…

பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி kashyapan, T.N.MURALIDHARAN, மீனாக்ஷி, bandhu, பத்மநாபன், சிவகுமாரன், Anuja Kekkepikkuni, ராமசுப்ரமணியன், ஸ்ரீராம்.,...

சிவகுமாரன் - நெகிழ வைக்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய அப்பாதுரை! உங்கள் நசிகேத வெண்பா ஒரு சீரிய முயற்சி.. உங்கள் உழைப்பின் பலனாய் இந்த விருந்து எல்லோருக்குமாய் அமைந்தது. அவ்வப்போது இதில் சில கருத்துகள் இட்டு இந்தத் தேரின் வடத்தை தொட்டு நின்றதை நல்வாய்ப்பாய்க் கருதுகிறேன். உங்கள் பணி சிறக்கட்டும். என்றென்றும் அன்புடன்...

Unknown சொன்னது…

அருமையான வெண்பா வாழ்க்கை தத்துவத்தை விளக்கிய விதம் நன்றாக இருந்தது நன்றி எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லுங்க

குறையொன்றுமில்லை. சொன்னது…

ஒரே வார்த்தையில் சொல்லனும்னா சூப்பராஇருக்கு கடுமையான உழைப்பும் தெரியுது வாழ்த்துகள்

அப்பாதுரை சொன்னது…

மிகவும் நன்றி மோகன்ஜி, Mohan P, Lakshmi.

வெற்றிவேல் சொன்னது…

கடுமையான உழைப்பு... தொடருங்கள், அருமை...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

இன்றுதான் உங்கள் வலைப்பூவின்
மணத்தை முகா்ந்து மகிழ்ந்தேன்!

நசிகேச வெண்பா நுாலை முழுமையாகப் படிப்பேன்!

அப்பா துரையாரின் அன்பு நசிகேசம்
தப்பா தளிக்கும் தமிழ்வளத்தை! - இப்பாரோர்
உற்ற துயா்போக்கும்! ஒண்ணொளி நெஞ்சுடையோர்
பெற்ற பயன்சோ்க்கும் பேறு!

கவிஞா் கி. பாரதிதாசன் - பிரான்சு
kambane2007@yahoo.fr

போன்று - உசிப்பொருளை
போன்று குற்றியலுகரம் று கெட்டுத்
தளைதட்டும்
உசிப்பொருளைத் தப்பா என்று வல்லினம் மிகும்

அச்சுப் பிழையைத் திருத்தம் செய்துகொள்ளவும்

ஜோதிஜி சொன்னது…

உங்கள் எழுத்து நடையும், வாசிப்பு அனுவத்தின் வீச்சையும் இன்று தான் முழுமையாக உணர்ந்தேன்.

உங்கள் தொடர் அக்கறைக்கு நன்றி.

அப்பாதுரை சொன்னது…

வருக இரவின் புன்னகை, கவிஞர் பாரதிதாசன், ஜோதிஜி,... கருத்துக்கும் மிகவும் நன்றி.

திருத்திவிட்டேன் கவிஞரே. பிழை சுட்டியதற்குக் கடமைப்பட்டிருக்கிறேன்.
முழுதும் படிக்க வேண்டுகிறேன். கனிமொழி வெண்பாவுக்கும் நன்றி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அப்பாதுரையின் நசிகேத நூல் வெண்பா,

தப்பாமல் படித்துணர்ந்த நபர், ஜீவனுக்கு

அப்பாலுமுள்ள ஆறாத் துயர் நீங்கி

இப்பாரில் இனிதே வாழ்வார் இனி !


ஷைலஜா சொன்னது…

தப்பாமல் படிக்கத்தவறியவளை
தப்பினாலும் தவறில்லை:0
அப்போதைக்கிப்போதே சொல்லிவைக்கிறேன்
-இனி
எப்போதும் உடன் படித்து இட்டிடுவேன் பின்னூட்டம்:)

சும்மா புலியைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டபூனையாக ஏதோ எழுதினேன் என்றாலும் இந்தக்கடசிவெண்பாவைப்படித்ததும்தான் (பாதங்கள் இவையென்னில் படிமங்கள் எப்படியோ என்பானே கம்பன்?) மற்றவைகளைப்படிக்கத்தவறியதை உணர்ந்தேன் முழுக்க வாசித்து முழுமையாக மீண்டும் வருகிறேன் திரு அப்பாதுரை! பாராட்டுக்கள்!

Thenammai Lakshmanan சொன்னது…

கடைசியில்தான் வந்துள்ளேன்.மிக அருமையான முயற்சி. எனக்குப் பிடித்தவர் நசிகேதன்.

படிக்கிறேன். புத்தகமாக்கம் செய்துள்ளீர்களா.

பனித்துளி சங்கர் சொன்னது…

நல்ல முயற்சி

Ramesh DGI சொன்னது…

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News