வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2011/02/18

நசிகேதன் வேண்டிய மூன்றாம் வரம்


27
உள்ளார் இலாரென்றுப் பல்லார் உயிரது
புள்ளாய்ப் பறந்தபின்னும் சொல்வானேன்? தெள்ளிய
மூதறிவாய் மூன்றாம் வரந்தருவீர் உம்மொழியாற்
சாதலின் நுண்மை நவின்று.

    யிர் உடலை விட்டுப் பறவை போல் பறந்து போன பின்னும், இறந்தவரை இருப்பதாகச் சிலரும் மறைந்ததாகச் சிலரும் சொல்கிறார்களே, அது ஏன்? மரணத்தின் இயல்பைப் பற்றியத் தெளிவான முழு அறிவை உங்களிடமிருந்து பெறுவதே என் மூன்றாவது வரமாகும் (என்றான் நசிகேதன்).



    சிரியர்களுக்குத் தொலைநோக்கு உண்டா? தொலைநோக்கின் அடிப்படையில் ஒரு நல்ல ஆசிரியனுக்கு தொழில்முறை இக்கட்டு வருவது உண்டா?

ஆசிரிய-மாணவ உறவு நுட்பமானது. முற்றிலும் தன்னலமில்லாத அக்கறையெனில், ஒரு நலல ஆசிரியரின் அக்கறை மட்டுமே. தாயிடம் கூட இந்தத் தன்மையை எதிர்பார்க்க இயலாது என்று தோன்றுகிறது. ஆசிரிய-மாணவ நட்பும் உறவும் எல்லா ஆசிரிய மாணவருக்கும் கிடைப்பதில்லை. அந்த வருட அறிமுகங்களோடு முடிகின்றன; தற்காலிக நட்பாகக் கூட வளர்வதில்லை பெரும்பாலும். சில ஆசிரிய-மாணவ நட்புகளோ சாதாரண உறவு நிலைகளையும் தாண்டி நிரந்தரப் பிணைப்பாகிறது. இன்றைய முகமற்ற சமூகத்திலும் இத்தகைய ஆசிரிய-மாணவப் பிணைப்புகள் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றே நம்புகிறேன்.

ஒரு கதை. தொடர்ந்து ஒரு கேள்வி.

இரண்டு மாணவர்களும் சிறு வயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். சிறந்த மாணவர்கள். இருவருக்குமே தங்கள் வாழ்வில் பொதுநலன் கருதி வாழவேண்டும், இன்னாராய் உயர வேண்டும் என்ற நோக்கங்கள் உண்டு. சீர்மைக்கானத் தொலைநோக்கோடு கல்லூரியில் காலெடுத்து வைத்தார்கள்.

'சத்துள்ள செயற்கை உணவு' பற்றிப் படித்து ஆராய்ச்சி செய்து, பட்டப்படிப்பு முடித்து அதே துறையில் பணி செய்து, செயற்கை உணவுக்கான தூண்டு மற்றும் செரிமானப் பொருளைக் (enzymes) கண்டுபிடித்து, சத்துள்ள செயற்கையுணவைக் குறைந்த செலவில் தயாரித்து, உலகத்தின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோள் இருவருக்கும் உண்டு.

கல்லூரியிலேயே முதல் மாணவனாக வந்தால், 'செயற்கை உணவு தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக, உயர்ந்த சம்பளத்தில் உலகம் முழுதும் சுற்றி வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்' என்பதை, கல்லூரிக்கு வந்த முதல் நாளில் அறிந்து கொண்டார்கள்.

வாழ்வும் வளமும் பெறும் நம்பிக்கையுடன், இருவருமே நன்றாகப் படிக்கத் தொடங்கினார்கள். ஒருவன் தொடர்ச்சியாக நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்தான். இன்னொருவன் நாளடைவில் படிப்பில் கவனம் செலுத்தாமல், விளையாட்டிலும் மற்றவற்றிலும் கவனம் செலுத்தி அவற்றில் முதன்மையாக வந்தான்.

முதல் மாணவன், தான் கொண்ட குறிக்கோளுக்கிணங்க கல்லூரியிலேயே முதன்மையாக வந்து, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்து, தொழிலில் மேன்மையுடன் நான்கு வருடங்களாய்த் தொடர்ந்து பதவி உயர்வும் பெற்று வந்தான். எனினும், குறிக்கோளை அடைந்த பாடில்லை; ஆராய்ச்சிக்கும் தொழிலுக்கும் ஏதோ ஒரு தடை வந்து கொண்டே இருந்தது.

விளையாட்டிலும் மற்றவற்றிலும் முதன்மையாக வந்த மற்றவன், சேர்த்து வைத்த பணத்தில் சிறிதை லாட்டரிச் சீட்டுகள் வாங்கச் செலவழித்தான். தொடர்ச்சியாக நான்கு வருடங்களில் அவனுக்கு லாட்டரிப்பரிசு விழவும், மிகுந்த செல்வந்தனான். அதை வைத்து விளையாட்டுக் குழுக்களையும் திடல்களையும் வாங்கி வளர்த்து மேலும் செல்வம் சேர்த்தான். பத்து வருடங்களுக்குள் உலகச் செல்வந்தர் பட்டியலில் இடம்பெற்றான்.

பத்தாம் வருடம், உலகமெங்கும் பரவியப் பொருளாதார நெருக்கடியில் அடிபட்ட பன்னாட்டு நிறுவனம், சிதைந்து போகும் நிலைக்கு வந்தது. 'வேலை இழப்பில் கவலையில்லை, காரியம் கைகூடி வரும் வேளையில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்து முடிக்க இயலாதோ' என்று முதல் மாணவன் வசதியிழந்து வருந்திக் கொண்டிருக்கையில், செல்வந்தனான மற்றவன் அந்தப் பன்னாட்டு நிறுவனத்தை விலைக்கு வாங்கினான்.

பழைய மாணவர்கள் வேறு சூழலில் மீண்டும் சந்தித்தார்கள்.

    கதையின் போக்கு சுவாரசியமாக இருந்தாலும், கேள்வி அதைப் பற்றியதல்ல. கேள்வி: நீங்கள் இவர்களின் சிறு வயது ஆசிரியராக இருந்திருந்தால், இரண்டு மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே சிறப்பாகக் கல்வி கற்றுத்தர முடியும் என்ற நிலையில், எந்த மாணவரைத் தேர்ந்தெடுத்திருப்பீர்கள்?

    கூட்டிலிருந்து பறந்த புள் எங்கே போகும்? இன்னொரு கூட்டைத் தேடிப் போகும் அல்லது அதே கூட்டுக்குத் திரும்பும் என்பது சிற்றறிவுக்கும் எட்டுமே? உயிர்ப் பறவை இன்னொரு கூட்டைத் தேடிப் போவதைத் தான் மரணம் என்கிறோமா? இது உண்மையானால், உயிர்ப்பறவை எத்தனைக் கூடுகளைத் தேடிப் போகும்? எப்போது சளைக்கும்? ஒருவேளை உயிர்ப்பறவை பிரிந்த கூட்டுக்கே திரும்பி வரும் பொருட்டில், பறந்த நேரம் மட்டுமே மரணமா? கேள்விகள் தொடர்ச்சியாக நமக்கே தோன்றும்போது, நசிகேதன் மனதில் தோன்றியிருக்காதா? எமனைப் பார்த்து இலேசாகச் சிரித்து, "ஐயா, எமன் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு மனித உயிர் அதன் உடலை விட்டுக் கூடு விட்ட பறவை போல் பறந்து போனதும், 'மனிதர் இறந்து போனார்' என்கிறார்கள் சிலர். இன்னொரு கூட்டத்தினரோ, 'இல்லை மனிதர் இறக்கவில்லை, இன்னும் இருக்கிறார்' என்கிறார்கள். இதில், யார் கூற்று உண்மை? இந்த ஐயத்தினால் ஏற்பட்டக் குழப்பம் என்னை வாட்டுகிறது. மரணத்தின் தன்மை பற்றித் தெளிவாக எடுத்துச் சொல்லி என் குழப்பத்தை நீக்குங்கள். இந்த அறிவை நீங்களே வழங்க வேண்டும். இது என் மூன்றாவது வரம்" என்றான்.

    அறிவை அதற்கான ஆசிரியரிடம் பெறுவது போலாகுமா? இருபடிச் சமன்பாட்டுக் கணிதம் பற்றித் தமிழாசிரியரிடம் விளக்கம் கேட்டால் பலனிருக்குமா? மரணத்தின் தன்மை பற்றி விளக்க, மரணதேவனை விட ஒரு சிறந்த ஆசிரியன் கிடைப்பானா?

    எமனும், "மரணத்தின் தன்மை தானே? கேள். உயிர் போனது போனது தான்" என்றோ, "உயிர் போகவில்லை, சுற்றிக் கொண்டே இருக்கும்" என்றோ சுருக்கமாகச் சொல்லிவிட்டால், கதை முடிந்து விடும். அத்தகைய பதிலினால் யாருக்கு என்ன பலன்? உருப்படாத வரமாகி விடுமே? அதனால் நசிகேதன், "தெள்ளிய மூதறிவு வேண்டும்" என்று கேட்டான்.

    மூதறிவு என்றால் முதிர்ந்த அறிவு. அறிவு எப்படி முதிர்கிறது? மூன்று வகையில் அறிவானது முதிர்ச்சியடைகிறது. தெரிந்து கொள்ளும் வகையிலும், புரிந்து கொள்ளும் வகையிலும், அறிந்து கொள்ளும் வகையிலும் என மூவகையிலும் முதிர்வதே மூதறிவு. மேலோட்டமான புரிதல் அல்ல மூதறிவு என்பதை மட்டும் இங்கே வலியுறுத்தி, மூவகை அறிவு முதிர்ச்சி பற்றிய விளக்கத்தைப் பிறகு சேர்க்கிறேன்.

    மேம்போக்கான பதிலைச் சொல்ல இடம் தரலாகாது என்று திட்டமிட்டே தெள்ளிய மூதறிவு கேட்டான் நசிகேதன். "ஐயா, எமனாரே, மரணத்தின் நுண்மையை அறிய விரும்புகிறேன். ஏனென்றால், மரணத்துக்கப்பால் நடக்கக்கூடிய நன்மை தீமைகளைப் பற்றி உயிருடன் இருக்கும் போதே அறிந்தால், பயனுள்ள வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும். மரணத்தைப் பற்றிய அறியாமை நீங்கி, நல்வாழ்வு வாழ முடியும்" என்று சொல்லாமல் சொன்னான். "மரணம் பற்றிய மூதறிவு வேண்டும், அதுவும் உம்மொழியால் வேண்டும்" என்று சொல்லி, எமனின் பதிலுக்குக் காத்திருந்தான்.

    எமன் முகத்தில் ஈயாடவில்லை.

55 கருத்துகள்:

RVS சொன்னது…

// எமன் முகத்தில் ஈயாடவில்லை.//
ஈயாடாத எமன் முகம் கண்ணில் ஆடுகிறது.
நடுவில் வந்த கதை வெகு சுவாரஸ்யம். இது தான் விதியோ? அதிர்ஷ்டமோ?
மரணத்துக்கு அப்புறமும் அமரத்துவம் பெற வேண்டும் என்ற நசிகேதன் இக்காலத்தில் சாமியார் நாடி ஓடுவோருக்கு தீர்வு இருக்கும் வகையில் கேள்வி கேட்டு பதில் வாங்கினானா?
சன் டி.வி சீரியல்ல வெள்ளிக்கிழமை ஒரு சீரியஸ் நாட் வச்சு முடிப்பாங்க. திங்கக் கிழமையிலேர்ந்து திரும்பவும் பார்த்து அழனும்ன்னு. அதுமாதிரி இந்த எபிசோட முடிச்சுட்டீங்க அப்பாஜி!

RVS சொன்னது…

அழறத்துக்கு இல்ல... ;-)

geetha santhanam சொன்னது…

வெண்பாவும் விளக்கமும் அருமை. இடையில் சொன்ன கதை இன்னும் அருமை. நான் ஆசிரியரானால் முதலாம் மாணவனுக்கே கற்றுக் கொடுப்பேன். ஏனென்றால் பிற விஷயங்களால் அவன் கவனம் சிதறவில்லை.
/உயிர் பறவை ஒரு கூட்டிலிருந்து இன்னொரு கூட்டிற்குப் பயணிப்பதுதான் மரணமா?/ - நல்ல கேள்வி. அந்த பயணத்தைப் பற்றி கடோ என்ன சொல்கிறது என்று அறிய ஆவலாயிருக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

வருக RVS, geetha santhanam, ...

RVS: நசிகேதன் கேட்டு வாங்கிய பதில் மூவாயிரம் வருசம் போல் கண் முன்னாலயே தான் இருக்கு. சாமியாரை நாடி ஓடிக்கிட்டுத் தான் இருக்கோம்.

அப்பாதுரை சொன்னது…

geetha: உங்கள் மாணவத் தேர்வின் காரணம் என்ன? 'பிற விஷயங்களால் அவன் கவனம் சிதறவில்லை' என்பது hind sight ஆச்சே?

பத்மநாபன் சொன்னது…

நல்லாசிரியர் – மாணவர் பற்றிய கதை அருமை... படிப்பில் கவனம் செலுத்தாத மாணவனின் கவனத்தை படிப்பின் பக்கம் ஈர்ப்பது தான் நல்லாசிரியரின் கடமை... படிப்பில் கவனிருப்பவன் தானே படித்துவிடுவான்...
உயிரை பறவையோடு ஒப்பிட்டது பொருந்தி வருகிறது....போய் சேரும் இடம் பெரும்கூடா , மீண்டும் மனிதக்கூடா ...இல்லை ஒன்றுமில்லாத கரைதலா...
மூன்றாம் வரம் வாழ்வியலின் அத்தனை சாராம்சங்களையும் அடங்கிய வரம்....இதற்கான பதிலை அறிவதும் உணர்வதும் தான் மரணத்தை விட கொடுமையான மரணபயத்தை வெல்லும் அறிவாகும் ...ம.தேவன் முகத்தில் மட்டுமல்ல இப்பதிலை அறிய அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை....

சிவகுமாரன் சொன்னது…

\\\எமன் முகத்தில் ஈயாடவில்லை//

ரசித்தேன்.

நான் இரண்டாவது மானவனைத்தான் தேர்ந்தெடுப்பேன். எடுத்த செயலில் கவனம் சிதறக் கூடாது என்பதால், திருத்தப்பட வேண்டியவன் அவன் தான்.
( என் விதி என்னைச் சார்ந்தவரையும் பதம் பார்க்காமல் விடுமா ....)

மோகன்ஜி சொன்னது…

அன்றைய குருகுல முறையில், வேதமோ,சாச்திரங்களோ,வில் வித்தை போன்றவையோ கற்பித்த காலத்தில், ‘மாணாக்கன் திரிபரக்கற்றுத்தெளிதல்’ என்ற ஒரே தொலைநோக்கு மட்டுமே இருந்தது. இதை கதைகளிலும், இலக்கியத்திலும் காண்கிறோம்.
இன்றைய இயந்திர உலகில் தொலைநோக்கு மிகவும் குறைந்தே உள்ளது. Short term Gains ..உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஞானத்தைக கற்பிக்கும் இரண்டு நிமிட ‘மேகி’ சிலபஸ் தான் நடைமுறை. ஆழ உழுவதில் நம்பிக்கை போய், அகல உழுகிறார்கள்.

கல்வி காசுபண்ணும் சுரங்கமாகி பலகாலம் ஆகிறது. இதில் தொலைநோக்கு என்பது ஒரு கெட்ட வார்த்தை. மாறாய், ‘தொல்லைநோக்கு’ அதிகரித்து விட்டது. தனிப்பட்ட டியூஷனுக்கு மாணவனை நெருக்குவது பரவலாகி விட்டது. இது மிக வருந்தத் தக்கது. அனைத்து ஆசிரியர்களும் இப்படித்தான் என்று நான் சொல்ல மாட்டேன். எனினும் இது நடைமுறையாகி போய் விட்டது என்பதே உண்மை.

ரொம்ப சீரியஸாய் பேசிக் கொண்டிருக்கிறோமோ?

மேலாளர்களுக்கு நான் வகுப்பெடுக்கும் போது ஒரு கேள்வி கேட்பதுண்டு...

‘கர்ணனின் ஆசிரியர் பரசுராமர், அவன் மடிதனில் தலைவைத்து
தூங்கிய கதை தெரியும் தானே?’

‘எஸ் சார்’

“ஆசிரியர் தலை வைத்திருந்த கர்ணனின் தொடையை வண்டு துளைத்த போது, ஏன் கர்ணன் வலியையும் பொருட்படுத்தாது சத்தம் போடாமல் இருந்தான் தெரியுமா?”

“ஆசிரியர் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணம் தான் சார்”

“அப்படி இல்லை. சத்தம் போட்டு, அதனால் ஆசிரியர் எழுந்து விட்டால் மீண்டும் பாடம் எடுக்கத் தொடங்கி விடுவார்! அதற்கு வண்டுக்கடியே தேவலாம் என்று தான் பொறுத்துக் கொண்டிருந்தான் !!”

மதியத்து வகுப்பில் எப்போதாவது இப்படி ஏதாவது பிட்டைக் கொளுத்திப் போட்டால், தூங்காமல் கேட்பார்கள் எனும்
தொலைநோக்கு தான்!..

இன்னும் சொல்வேன்..

பத்மநாபன் சொன்னது…

//இப்படி ஏதாவது பிட்டைக் கொளுத்திப் போட்டால், தூங்காமல் கேட்பார்கள் எனும்
தொலைநோக்கு தான்!..// இப்படி ஒரு பிட்டை போட்டு வந்து கொண்டிருந்த என் தூக்கத்தை கெடுத்துட்டிங்க...

நீங்க சரியான வாத்தியாருதான்... சீரியஸ்ன்னு புரிஞ்சு சடாரென நகைச்சுவையை கலக்கும் வித்தை எல்லார்க்கும் வருவதில்லை மோகன்ஜி

சிவகுமாரன் சொன்னது…

மோகன்ஜியின் வகுப்பில் ஒருநாள் மாணாக்கனாய் இருக்க வேண்டுமே.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

ஐயோ அப்போ நானும் அந்தாக்ல இறந்து ஒரு ரவுண்டு போயிட்டு திரும்ப வர முடியுமா ?

அப்பாதுரை சொன்னது…

வருக பத்மநாபன், சிவகுமாரன், மோகன்ஜி, சாய்,...

அப்பாதுரை சொன்னது…

சாவை விட சீரியஸ் விஷயம் உண்டோ மோகன்ஜி? சிந்தித்துப் பார்க்கையில்.. சாவில் சீரியசாக எதுவுமே இல்லையோ?

தொல்லைநோக்கு - ரசித்தேன். ஆசிரியத் தொழில் புரிவோருக்கும் ஆசிரியருக்கும் வேறுபாட்டை அறியாமலே இரண்டு தலைமுறைகளைக் கடந்திருக்கிறோமோ? காசு பண்ணுவதில் குற்றமில்லை என்று நினைக்கிறேன். ஆசிரியனுக்கும் வயிறு குடும்பம் உண்டே? அப்படியே செய்தாலும் ஆசிரியன் அத்தனை காசு பார்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். இருப்பினும், காசுக்கு மேலே ஒன்று உண்டு என்பதை மறந்த ஆசிரியன் வெறும் ஆசிரியத் தொழில் புரிபவனாகிறான், இல்லையா?

கர்ணன் கதை சுவை. சரி, நீங்களும் RVS, சாய் போல ஓட்டு போடாம ஓடிட்டா எப்படி ஆசிரியர்வாள்? உங்கள் மாணவத் தேர்வைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவல்:). இதுவரை ஓட்டு விவரம் பின்வருமாறு:
முதல் மாணவன்: 1
இரண்டாம் மாணவன்: 2

மோகன்ஜி சொன்னது…

ஞானமார்க்கம் பயிற்றும் குருவையும் அவரின் சீடனையும் இந்த விவாதத்தில் விட்டுவிடுவோம்.

நீங்கள் சொன்னது போல் ஆசிரிய மாணவ உறவு ஒரு வருடம் தாண்டி பெரும்பாலும் நீடிப்பதில்லை. அடுத்த வகுப்புக்கு முன்னேறிய மாணவன்,புது ஆசிரிய சொந்தத்தில் திளைப்பதாலும்,போன வருட ஆசிரியருக்கோ புது மாணவர்களோடு மாரடிக்க வேண்டியிருப்பதாலும் ,
”ஆ-மா’தொடர்ச்சி நீள்வதில்லை போலும்!

ஆசிரியப் பணி ‘சேவை’ என்ற கோபுரத்திலிருந்து,’தொழில்’ எனும் சமதளத்திற்கு இறங்கியபின்,அந்த பிணைப்பினை எதிர்பார்க்க இயலாது தானே?

என் ஒன்பதாம் வகுப்பில் தமிழ் இலக்கணம் சொல்லித்தந்த என் தமிழாசிரியருடன் எனக்கு அத்தகு உறவு இருந்தது. அலகிடுதல் வகுப்பு எடுத்திருந்தார். கையோடு என் நண்பனின் ஹோமொர்க் நோட்டின் கடைசி பக்கத்தில் அந்த ஆசிரியரை பற்றியே கேலியாக ஒரு வெண்பா எழுதினேன். எப்படியோ அவர் பார்வைக்குப் போய் விட்டது. காட்டிக் கொடுக்கப் பட்டேன். நான் தான் எழுதினேன் என்று தெரிந்ததும்,எதனாலோ உட்கார் என்று மட்டும் சொல்லிவிட்டு விட்டுவிட்டார்.

இரண்டு நாட்கள் கழித்து என் அப்பா என்னுடன் மெல்ல பேச ஆரம்பித்தார். பாடல் புனைவது பற்றியும், எழுத்தில் கண்ணியம் பற்றியும் சொன்னபடி வெண்பா விவகாரத்தைப் பற்றி கேட்டார். ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார். ஆனாலும் திட்ட வில்லை. என் மன்னிப்பையும் ஒரு வெண்பாவாய் எழுதித் தந்தேன். வாய்விட்டு சிரித்தபடி,தன்னோடு அணைத்துக் கொண்டார். அவர் ஜிப்பாவில் அடித்த மூக்குப் பொடி நெடி இன்னும் நினைவில் இருக்கிறது என் வெண்பா இரண்டுமே நன்றாய் இருப்பதாயும் சொல்லி,பாட்டெழுத ஊக்குவித்தார். அவரே தலைப்புகளும் கொடுத்து மேலும் எழுதச் செய்தார்.. என்னை நிறைய எழுத வைத்தார். சென்னையில் கல்லூரியில் படித்த நாட்களில் எழுதிய கவிதைகளை ஊருக்கு வரும்போது அவரிடம் காட்டுவேன்.
அப்போது எழுந்த புதுக் கவிதையின் தாக்கத்தில் என் எழுதுமுறை மாறிப் போனது. ஆனால் ஆசிரியர் அவற்றை ரசிக்கவில்லை. பிடிவாதமாய் ஏற்க மறுப்பார். ஆனாலும் எதனாலோ புதுக்கவிதைகள் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன.
அவர் மரணம் என்னை பாதித்த சில விஷயங்களில் ஒன்று.அவரை பற்றி நினைக்க வைத்த உங்களுக்கு நன்றி.

நானும் இரண்டாம் மாணவனையே தேர்ந்தெடுப்பேன்.
சுயபுராணம் நீண்டுதான் விட்டது ஸாரி!

மோகன்ஜி சொன்னது…

/சாவை விட சீரியஸ் விஷயம் உண்டோ மோகன்ஜி/

சாவு ஒரு சீரியசான காமெடி அப்பாதுரை. சாய் சொல்வதைக் கேட்டீர்களா? செத்துசெத்து விளையாடலாமா என்கிறாரே!

அப்பாதுரை சொன்னது…

ஒரு ரவுண்டு என்ன, ஒன்பது அடிங்க சாய்.

அப்பாதுரை சொன்னது…

ஞானமார்க்கம் பயிலும் சீடனுக்கும் அவன் குருவுக்கும் - இந்த விவாதத்துக்கும் தொடர்பு உண்டே மோகன்ஜி? தானாகவே வெளிவரட்டும். முன் பாடலொன்றில் ஆசிரியர்-மாணவர் உறவு பற்றிய என் கருத்தை சிவகுமாரன் எழுதச்சொன்னார் - இனி நிறைய வரும் என்று சொன்னேன். தொடங்கி விட்டது. இனி சிவகுமாரனே நிறுத்து என்று கெஞ்சினாலும் சந்தேகம் தான். :)

உங்கள் கருத்துக்கு வருகிறேன். உங்கள் தமிழாசிரியர் உறவை எங்களுடன் பகிர்ந்ததற்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்.

தொழில் என்பது சேவைக்கு ஒரு தட்டு கீழே என்பது உண்மையாக இருக்கலாம். கூலிக்கான எதிர்பார்ப்பு இருப்பதால். இருந்தாலும், இன்றைய நிலவரத்துக்கு தொழில் முறை சரியே என்று நினைக்கிறேன் மோகன்ஜி. அந்த நாளிலும் குருதட்சிணை என்ற எதிர்பார்ப்பும் வழக்கமும் தொழிலாகவே பார்க்க வைத்தது. சேவை என்ற கோணத்தை மறந்து விடுவதைத் தான் 'தொழில் மட்டும் புரிவதன்' விளைவாகச் சொன்னேன். of course, சில தொழில்கள் சமூகத் தொலைநோக்குடன் இழையவேண்டியவை - நிச்சயம் ஆசிரியத் தொழில் அதில் ஒன்று. ஆனால், நீங்கள் சொல்லியிருப்பது போல் இன்றைக்கு ஆசிரிய வேலையும் ஒரு கூலிக்கு மாரடிக்கும் வேலை. அவ்வளவே. அந்த நிலையில் ஆசிரியரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை - மாணவரும் பாதிக்கப் படுவதில்லை - சமூகமும் பாதிக்கப்படும் வாய்ப்பை இழந்து விடுகிறது. என்ன சொல்கிறீர்கள்?

மோகன்ஜி சொன்னது…

உங்கள் நசிகேத வெண்பாவில் இனிமேல் நீங்கள் சொல்லபோகும் விஷயங்களில், ஞானமார்க்கம் மேலும் இந்த விவாதத்திற்கான தளமாய் அமையும். எனவேதான் அதை இச்சமயம் நான் தவிர்க்க எண்ணினேன். அந்தந்த நேரம் கும்மியடித்தால் போயிற்று!

அந்தக்காலத்தில் குருதட்சணை என்பதை ஒரு கட்டாய கடனாகத்தான் சொல்லியிருக்கிறார்கள். குருவின் எளிமையான ஜீவனோபாயத்திற்கென இயன்றதைக் கொடுப்பது மாணாக்கன் கடமை. கல்வி முடிந்தபின்னும் மாணாக்கன் வாழ்க்கையில் குருவின் ஆதிக்கம் இருக்கவே செய்ததை படிக்கின்றோம். குருமார்கள்,ஒன்று, தட்சணையை எதிர்பார்க்கவில்லை அல்லது தட்சணையாக கட்டைவிரலைக் கேட்டார்கள்!

இன்று மாணவனின் அறிவு விருத்திக்கு ஆசிரியர் மட்டும் பொறுப்பல்ல. மீடியா, இன்டர்நெட்,விவாதங்கள்,நட்பு என்று சமூகத்தின் அத்துணை அங்கங்களும் பயிற்றுவிக்கின்றன. சங்கீதம் முதற்கொண்டு இந்தக்காலத்தில் குருவையே அதிகம் நாடாமல் தன் முயற்சியில் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. அன்று குருவின் முனைப்பு மாணாக்கனை மேம்படுத்தியது. இன்று மேம்பாட்டுக்கு மாணவன் சுயமுனைப்பு அதிகம் தேவை. இப்படி சொல்வதாலேயே ஆசிரியர் தேவையில்லை என்பதல்ல.. HAND HOLDING அதிகம் தேவைப்படுவதில்லை. இன்று ஆசிரியர் ஒரு FACILITATOR. அதை செம்மையாய் அவர் மேற்கொண்டாலே போதும்.

RVS சொன்னது…

ஒரு பக்கம் வெண்பாவுடன் விளக்கம், நாலு பக்கம் கருத்துரைகளில் கலக்கல். ரொம்பவும் சுவாரஸ்யமாய் போகிறது ஜி!
எது தனக்கு வரம் என்று தெரிந்து கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டதால் தான் நம்பர் 2 வாழ்க்கையில் வெற்றியடைந்தான். நம்பர் ஒன்றும் பாராட்டத்தக்கவனே. இருந்தாலும் பாதியில் ஒன்றை பற்றி அதில் வெற்றிக்கொடி நாட்டியதால் ரெண்டாம் நம்பர் அதி திறைமைசாலி என்று விளங்குகிறது.

எனக்கு எப்போதுமே முதல் பிடிக்காது. ரெண்டாவது தான் பிடிக்கும்!! ;-)

எங்கள் அலுவலகத்தில் நிறைய ப்ராஜெக்ட் நான் சுயமாக நெட்டில் படித்து செயல்படுத்தியதுதான். மோகன்ஜி சொன்னது போல இப்போது வாத்தியார்கள் FACILITATORS. ஏனென்றால் நெட்டெங்கும் விரவிக்கிடக்கிறது ஏராளமான தகவல்கள். தேடிக்கண்டுகொண்டவன் பாக்கியசாலி!

meenakshi சொன்னது…

அருமையான பதிவு! சுவாரசியமாக, அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

உங்கள் கேள்வி சற்று கடினமான கேள்விதான். இது போன்ற இலட்சியங்கள் கொண்ட மாணவர்கள் வெகு சிலரே. அதிலும் கொண்ட இலட்சியத்தை ஒரு குறிக்கோளுடன் தவமாக இருந்து அடைபவர்கள் அதிலும் சிலரே. நான் ஒரு ஆசிரியராக இருந்தால், தன் குறிகோளில் இருந்து விலக முற்படும் அந்த இரண்டாவது மாணவனையே தேர்ந்தெடுத்து, அவனை ஊக்குவிக்க அவனுக்கு சிறந்த கல்வியை கொடுத்து, பாதை மாறாமல் அவன் இலட்சியத்தை அடைய அவனுக்கு உதவி புரிவேன். இதெல்லாம் முதல் மாணவனுக்கு தேவையே இல்லை, ஏனென்றால் அவன் மன உறுதியே, அவன் கொண்ட இலக்கை, அவனை அடைய வைத்து விடும்.

தகுந்த ஆசிரியரிடம் தகுந்த கேள்வியைதான் கேட்டிருக்கிறான் நசிகேதன். பதிலை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாய் காத்திருக்கிறேன்.

உயிரானது இன்னொரு கூட்டுக்குள் அடைந்தே ஆக வேண்டுமா? அப்படி ஒரு கட்டாயம் இல்லை என்றால் அது எங்கே போகும்? என்ன செய்யும்? வேறு என்ன நிலைகள் அதற்கு இருக்கிறது?

geetha santhanam சொன்னது…

நீங்கள் சொன்ன கதையில் 'சிறு வயதில் இருவரின் குண நலங்கள்' பற்றி குறிப்பு இல்லை. கல்லூரி காலத்தை எடுத்துக் கொண்டால் முதலாமவன் ஒரு குறிக்கோளை அடைய முழு மனதுடன் ஈடுபடுகிறான். அவனுக்கு மேலும் கொஞ்சம் support கிடைத்தால் அவனது உயர்ந்த குறிகோளை அடைவது நிச்சயம். அதனால்தான் அவனைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டாமவன் இரு குதிரைகளில் சவாரி செய்ய விழைவதால் he is like anyother student. மற்றவர்களைப் போல அவனையும் நடத்துவேன். காலம் என்ன கணக்குப் போடுகிறது என்பது தெரியாததால் அந்த கல்லூரி காலத்தைப் பொறுத்தவரை லட்சியத்தில் வெல்லும் வாய்ப்பு முதலாமவனுக்கே.

geetha santhanam சொன்னது…

மரணத்தைப் பற்றிய பயம் 'மரணத்துக்குப் பின் நம் மனைவி/மக்கள் எப்படி கஷ்டப்படுவார்களோ' என்பதால்தான் வருகிறது என்று நினைக்கிறேன். மூன்றாம் தலைமுறையையும் பார்த்த பெரியவர்கள் மரணத்தைத் தைரியமாகவே எதிர்கொள்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
பூமாவின் அப்பா சொன்ன ஒர் ஜோக்: சென்னையில் இந்த commercial phone call தொல்லை கொஞ்சம் அதிகம். ஒருமுறை ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் விடாமல் நாங்கைந்து முறை ஃபோன் செய்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தாராம். " நீங்கள் இந்த பாலிசியை எடுத்துக்கொண்டால் மரணத்தைப் பற்றி கவலையில்லை..." என்று சொல்லவும் இவர் " நான்தான் செத்துப் போய்விடுவேனே. அதுக்கு அப்புறம் எதைப் பற்றி கவலைப் படவேண்டும்?. " என்று கேட்க அந்த ஏஜெண்ட் வாயடைத்துப் போய் ஃபோன் செய்வதை விட்டராம்.

geetha santhanam சொன்னது…

இரண்டாமவன் படிப்பிலே விருப்பமில்லாமலோ அல்லது பாடம் புரியாமல் கஷ்டப்பட்டாலோ அவனுக்குக் கூடுதல் கவனம் தேவை. ஆனால் அவன் படிப்பிலும் கெட்டி விளையாட்டிலும் சுட்டி என்பதால் அவனுக்குக் கூடுதல் கவனம் தேவையில்லை.
முன்பு சொன்னது போல் லட்சியத்தை அடையும் முனைப்பு உடையவன் முதலாம் மாணவனே. முதலாமவன் கொண்ட உயர்ந்த லட்சியத்தை அடைய ஒரு ஆசிரியரின் கூடுதல் கவனிப்பு நிச்சயம் தேவை.

ஸ்ரீராம். சொன்னது…

கற்றுக் கொள்ளும் மாணவனுக்கு எதில் விருப்பமிருக்கிறதோ அதில் அவனை ஊக்குவிப்பதும் நல்லாசிரியரின் கடமைதானே...விளையாட்டுப் பக்கம் கவனம் திரும்பியவனை மறுபடி "இங்கே பார்..இங்கே பார்" என்று இதில் இழுத்துக் கொண்டிருந்தால் அவனுக்கு அதில் சுவாரஸ்யமிருக்குமா ..அந்தக் காலத்தில் என்னதான் நல்லாசிரியராக இருந்தாலும், என்னதான் மாணவர்கள் கற்றுக் கொண்டாலும் விஜயன் வில்லிலும், பீமன் கதையிலும் என்று ஏதாவது ஒன்றில்தானே ஸ்பெஷாலிட்டி காட்டினார்கள்? மாணவனின் விருப்பம் அறிந்து, அவன் திறமை எதில் என்று கண்டு அதில் அவனை ஊக்குவிப்பவரே நல்லாசிரியர்! (ஏதோ நானும் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்) இரண்டாமவன் வேறு ஒன்றில் கூட கவனம் செலுத்தாமல் சோம்பி இருந்தால் அவனை ஸ்பெஷலாக கவனித்து கற்றுக் கொடுக்க முனையலாம்.

அப்பாதுரை சொன்னது…

எனக்கு ஒரு அடி முன்னாலேயே நடப்பவர் மோகன்ஜி என்பதை அடிக்கடி மறந்துவிடுகிறேன். கும்மியடிக்க நிறைய வாய்ப்பிருக்கிறது, உண்மையே.

நிறைய நுட்பங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறீர்கள் மோகன்ஜி. எளிமை, கட்டாயக் கடன், ஆதிக்கம், 'இயன்றதைக் கொடுப்பது', கட்டை விரலைக் கேட்பது, ... எல்லாமே ஓட்டமுள்ளச் சிந்தனைக்கேணி.

காலமாற்றத்தில் வசதிகள் கூடியிருக்கின்றனவே தவிர, ஆசிரியரின் role அத்தனை மாறியதாகத் தெரியவில்லை. இன்ன ஆசிரியனிடம் பயில வேண்டும் என்ற ஆர்வம், ஆசிரியரின் திறமை காரணமாக, நல்ல மாணவனிடம் இருந்தது. தன்னை மாணவனாக ஏற்காது நிராகரித்துவிடப்போகிறாரே என்று சாக்ரேட்சிடம் ப்லேடோ செய்த ஜாலங்கள் எல்லாம் சுவையான கதை என்றாலும், அந்த ஆசிரியனிடம் தான் பயில வேண்டும் என்ற வெறி மாணவனிடம் இருந்தது. ஒரு ஆசிரியன் facilitator மட்டும் ஆனது வருந்த வேண்டிய விஷயம். இதற்கு மாணவனின் தன்முனைப்பைக் காரணம் சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது. இன்றைக்கு மட்டுமல்ல, நல்ல மாணவர்கள் என்றைக்குமே தன்முனைப்புள்ளவர்களே (கட்டை விரல் கேஸ் கூட அப்படித்தானே?). ஒரு ஆசிரியன் facilitator மட்டுமல்லாது friend, philosopher and guide என்ற மிக உன்னத role எடுக்கக்கூடியவர். அதை ஆசிரியர்கள் தான் முதலில் உணர வேண்டும் என்று தோன்றுகிறது. எத்தனை இன்டெர்னெட் வந்தாலும் guide என்பதில் ஒரு உயிரோட்டமும் அறிவோட்டமும் இருப்பதாக நினைக்கிறேன் - அது நெட்டிலும் நூலகத்திலும் கிடைக்குமா சந்தேகமே.

ஆசிரியர்களின் தொலைநோக்கைப் பற்றியப் பதிவில் சரியான உதாரணத்தைக் கொடுத்தீர்கள். கற்பனையாகவே இருந்தாலும், கட்டைவிரல் கேஸ் அந்த ஆசிரியரின் தொலைநோக்கா?

அப்பாதுரை சொன்னது…

வருக meenkashi.
இரண்டாவது மாணவனுக்கு ஓட்டா? சரி.
இரண்டாவது மாணவன் குறிக்கோளிலிருந்து விலக முற்பட்டான் என்கிறீர்களா? இருந்தாலும், அதுவும் hind sight தானே?

நீங்கள் சொன்னது போல் இது கடினமான கேள்வியா, அல்லது சுலபமான விடை ஒன்று இல்லாத கேள்வியா?

அப்பாதுரை சொன்னது…

நல்ல கேள்வி, meenakshi. (பதில் தெரியாவிட்டால் கேள்வி நல்ல கேள்வியாகி விடுகிறது)

'உயிரின் இலக்கு கூடு அல்ல; தனித்திருப்பதே' என்கிறது கடோ (இன்னும் சில ஆன்மீக/தத்துவப் புத்தகங்களும் இதையே சொல்கின்றன. tibetan book of the dead கிடைத்தால் படித்துப் பாருங்கள்).

உயிரின் பயணம் ஒரு கூட்டுக்குள் புகும் முயற்சி என்ற கோணத்தில் ஒரு ஞானமும், உயிரின் பயணம் கூடுகளை விடும் முயற்சி என்ற கோணத்தில் பிரிதொரு ஞானமும் உண்டாகிறதென்று நினைக்கிறேன்.

இந்தத் தத்துவத்தை மனித வாழ்க்கையின் மேல் போர்த்திப் பார்க்கும் பொழுது, மனித முயற்சிகள் உயிரின் முயற்சிக்கு நேரெதிராக இருப்பதை அறியலாம். அதனால் தான் conflict.

நானறிந்தவரை கடோ இதைத்தான் சொல்கிறதென்று நினைக்கிறேன்.

அப்பாதுரை சொன்னது…

RVS, இரண்டாம் நெம்பரில் ஒரு கவர்ச்சி இருப்பது உண்மையே. முன்னேற முடியுமே?

Coke Pepsi நிறுவனங்களின் வணிகப் போர்த் தந்திரங்கள் உலகறிவு. hertz avis வாடகைக்கார் கம்பெனிகளும் அப்படி market shareக்கு போட்டி போடும் நிறுவனங்கள். உங்கள் நெம்பர் 2 பிடிக்கும், hertz-avis போட்டியை நினைவுபடுத்தியது!

அப்பாதுரை சொன்னது…

excellent argument geetha! விடாதீங்க.

'இரண்டு மாணவர்களுமே இலட்சியத்தை அடையும் முனைப்பு உள்ளவர்கள்' என்பது தான் கதையின் premise. லட்சியம் என்ன இங்கே?

அப்பாதுரை சொன்னது…

மூன்றாம் (ஆ!) தலைமுறை பார்த்த பெரியவர்கள் மரணத்தைத் தைரியமாக எதிர்கொள்கிறார்கள் என்பது அருமையான insight, geetha! சோர்வா, நிறைவா என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

நிறைவான வாழ்க்கையென்றால் மரணபயம் இல்லை என்பதை உதாரணமாகச் சொல்கிறீர்களா? மூன்று தலைமுறை பார்த்தபின் தான் அந்த நிறைவும் நிம்மதியும் வருமா? ஏன் முன்பே வருவதில்லை? இதான் கடோ? பின்னால் வரும் ஒரு பாடலுக்கு விளக்கம் சேர்க்க நல்ல ஐடியா கொடுத்தீர்கள். நன்றி.

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீராம், வித்தியாசமான பார்வை.
மாணவனின் தன்மைக்கேற்ப வளைந்து கொடுத்து வழிகாட்டும் ஆசிரியரைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். தேவையே. எனினும், அது ஆசிரியருக்கு நிறைவைத் தருமா? தொலைநோக்குள்ள ஒரு ஆசிரியர் அப்படி வளைந்து கொடுப்பாரா?

ஓட்டுப் பெட்டி வரைக்கும் வந்துட்டு சட்டுனு விலகிட்டாப்ல தோணுது.

M.Srinivasan சொன்னது…

Dear Mr. Durai Sir,

After reading all comments i feel like coming out of university!

geetha santhanam kelviyum unga badhilum arpudham. moonraam thalaimuraiyil manushan rompa nodinchu thalarndhu poyidaraan. adhe samayam manasum lesa aagi nimmadiyum aagidaraan. ellaathukkum mele inime paakka vendiyadhu onnum illainnu ninaikkaraan. andha feeling irandaam thalaimuraila kooda kidaakarathillai. thannoda thevaigal adhukkappuram pillai naatuppon sarchaigal enru thallaadum manam thideernu amaidhi aavathu moonraam thalaimuraiyil thaane? adhanaale thaan.

anbudan
M.S.

I am proud of my heritage.
http://www.thambraasnanganallur.com/

மோகன்ஜி சொன்னது…

//கட்டைவிரல் கேஸ் அந்த ஆசிரியரின் தொலைநோக்கா?
// அது தொலை நோக்கல்ல.. கொலைநோக்கு! தன் பிரதம சீடனை விட ஏகல்வ்யன் பெரிய வில்லாளி ஆகக் கூடாது எனும் சின்னபுத்தி. ஒரு நல்ல குருவிடம் இருக்கக் கூடாத குணம்.

ஆசிரியன் ஒரு Friend,Philosopher and Guide ஆக இருப்பது என்பது ஒரு லக்ஷிய நிலை. அப்படி ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஆனால் அவர்கள் பெரும்பான்மையாய் அங்ஙனம் உள்ளனரா என்பதே கேள்வி.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

துரை

எது என்று ஓட்டு போட்ட, ஏன் என்று ஒரு கேள்வி கேட்ப்பீர்கள். எதுக்கு வம்பு

மோகன்ஜி, நீங்கள் எழுதும் ஆழங்கள் பயம் முடுத்துகின்றது. உங்களை நேரே காண்பது கொஞ்சம் ரிஸ்க்தான் போலே. உங்களிடம் பேசும் அளவு எனக்கு அறிவு வேண்டுமே ?!?!

- சாய்

அப்பாதுரை சொன்னது…

அழகாகச் சொன்னீர்கள் RVS. பல நேரம் மறந்து விடுகிறோம்.
>>>எது தனக்கு வரம் என்று தெரிந்து கொண்டு அதில் ஆர்வத்துடன் ஈடுபட்டதால்...

geetha santhanam சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
geetha santhanam சொன்னது…

மூன்றாம் தலமுறையில் நிறைவு/சோர்வு இவற்றோடு கடமை முடிந்த நிறைவும் வருகிறதோ? அப்பொழுதும் நம் மக்கள் வாழ்வில் settle ஆகாவிட்டால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருக்கவே தோன்றும் இல்லையா?

RVS சொன்னது…

ஒரு நல்ல மாணவனுக்கு.... படிப்பு ஒன்றுதான் என்று இல்லை..
தன் வெற்றிக்கு எது வழிவகுக்கும் (உருப்படியான வழியில்) என்று வாழ்க்கை ஓட்டத்தில் தேர்ந்தெடுத்து அதில் முன்னேறியவன் தான் கிரீடம் வைத்து பாராட்டு பெரும் உயர் தகுதியை அடைகிறான்.
நேரம் காலத்திற்கு ஏற்ப தன்னை திருத்திக்கொண்டு அதில் வெற்றி காண்பவன் நிச்சயம் அசகாய சூரனே! இதனாலேயே இரண்டாமவன் முதலாமவன் ஆகிறான்.

நன்றாகப் படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு தன் சம்பளத்தில் இருந்து ஃபீஸ் கட்டிப் படிக்க வைத்த மகானுபாவர்களைப் பார்த்திருக்கிறேன். கட்டை விரல் வாங்குவது கெட்ட சம்பவமே எனும் மோகன்ஜி அண்ணாவின் கருத்தோடு ஒத்துப்போகிறேன்.

ரஜினியை நம்பர் டூ என்று மன்னன் படத்தில் ஏசும் அடிதடி விஜயசாந்தியை பார்த்து "ஒன்னு பெருசா ரெண்டு பெருசா" என்று கேட்டு.. ரெண்டுதான் பெருசு அப்படின்னதும் அப்ப நான் தான் பெரியவன்.. என்று ரஜினி சொல்லுவார். சும்மா பட வசனம் தான் இருந்தாலும்............................

அப்பாதுரை சொன்னது…

நல்ல மாணவனுக்கு படிப்பு ஒன்று தான், RVS. அதனால் தான் 'நல்ல மாணவன்' என்று நினைக்கிறேன். வாழ்க்கை வெற்றிக்கும் கல்வி வெற்றிக்கும் தொடர்பு உண்டு என்றாலும், 'ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகும் - அதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகும்' என்பதைப் பார்க்கிறோம். நல்ல மாணவர்கள் எல்லாம் வாழ்க்கையில் ஏதோ ஒரு விதத்தில் வெற்றி பெறுகிறார்கள் என்பேன்; ஆனால், வெற்றி பெற்ற மனிதரெல்லாம்...

எத்தனையோ வெற்றியாளர்களின் எலும்புகளைச் சுமக்கும் இந்த உலகம் ஒன்றிரண்டு சாக்ரேட்ஸ்களைப் பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது.

மாணவனிடம் அத்தகைய தட்சணை கேட்பது குரூரம் என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால் கட்டை விரல் வாங்குவது 'கொலை வெறி' போல் தோன்றினாலும் holistic viewவில் வேறு காட்சிகளைத் தரும் என்று நினைக்கிறேன். இன்னொரு பதிவுக்கான விவாதம். (அல்லது சென்னை/ஹைதராபாக்கத்தில் திண்ணைக் கச்சேரிக்கான சப்ஜெக்ட். மகாபாரதத்தில் ஆழமில்லாத குட்டையில்லை!)

அப்பாதுரை சொன்னது…

வாழ்க்கையில் வெற்றிக்கான அடையாளங்களைப் பல வகையில் பார்க்க முடிகிறது - பணம், வசதி, புகழ், சிறை, பதவி,...

கல்வியில் வெற்றிக்கான அடையாளம் ஒன்றே ஒன்று மட்டுமே என நினைக்கிறேன் RVS.

பணத்தாலும் புகழாலும் வாங்க முடியாத ஒன்று கல்வியால் மட்டுமே பெற முடியும் ('வாங்க' முடியாது) - இது என் அனுபவம்.

அப்பாதுரை சொன்னது…

வருக ஸ்ரீனிவாசன்,...

இங்கே எல்லாருமே ஆசிரியர், எல்லாருமே மாணவர். truly open university! நன்றி.

தலைமுறை தாண்டிய நிம்மதி பற்றி நீங்கள் சொல்வது யோசிக்க வைக்கிறது. மூன்றாம் தலைமுறையில் பற்றறுக்கிறோமோ? (பிரதமர்களுக்கும் முதலமைச்சர்களுக்கும் எட்டுத் தலைமுறைகள் என்று எழுதிவிடுவோம் :)

அப்பாதுரை சொன்னது…

intellectual piracy பற்றி என்ன நினைக்கிறீர்கள், மோகன்ஜி?
'கொலைநோக்கு' ரசித்தேன்.

மோகன்ஜி சொன்னது…

Inteellectual piracy ! போட்டாரு பாருய்யா கொக்கி! இதை தமிழில் எப்படி சொல்வது? அறிவுத் திருட்டு? திறன் கொள்ளை??
உலகமுழுதும் இது பெரிய தொல்லையாயும்,வழக்குகளாயும் வளைய வருகிறது.. தொழில்நுட்ப ரகசியங்கள்,டேட்டாபேஸ் திருட்டு, ப்ரோக்ராம் திருட்டு இவை நீங்கலாக சினிமா கதை திருட்டு,புத்தகங்களை மலிவாய் அச்சிடுதல்,பிறர் படைப்பை
அனுமதி இன்றி கையாளுதல் போன்றவை அதிகமாகி விட்டன.

இன்றைய எழுத்துலகில், ‘தி.கொ’வுக்கு வாய்ப்புகள் அதிகம். சில வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடனில் என்று ஞாபகம்.. ஒரு பிரபலமான கதை/கவிதை ஏதோ ஒன்று, ஒருவரால் காப்பியடித்து அனுப்பப்பட்டு, பரிசும் கொடுத்து,பின்னர் உண்மை தெரிந்து அனுப்பியவர் கண்டிக்கப் பட்டார். இப்போது அம்மாதிரி நபர்களை தண்டிக்க சட்டம் அதிகம் நாடப்படுகிறது.

ஆனாலும் உணர்வுகளின் தாக்கம் எழுதப்படும் போது,.. காதலை எடுத்துக் கொள்ளுங்களேன். அதன் இரசாயனம் காதல்வயப்
பட்டோருக்கெல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி உணர்வுநிலை உருவாக்கியிருக்க வாய்ப்புண்டு. அந்த மனநிலையில் எழுதப்படும் கவிதைகள் ஒரே முடிச்சை இறுக்குவதுண்டு. சில சமயம் வரிகள் மாறாமல்..

நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.. உங்கள் விதி! படியுங்கள்..

பின்வாங்கல்

பலஆண்டாய் எழுதிவைத்த
கவிதையெல்லாம்,
பரண்தேடி தூசுதட்டி,
புத்தகமாய் போட்டுவிடும் ஆவலோடே
படித்துப்பார்க்க அவற்றிலே,
பலவற்றை பலகவிஞர்
ஏற்கெனவே போட்டாச்சு !
போகட்டும்...
உலகத்திலேயே ‘தீம்’கள்
மொத்தம்
முப்பத்திரண்டு தானாமே?!

இப்படி ஒரு கவிதையை வேறு யாரும் கூட எழுதியிருக்கக் கூடும்!

எதுக்கும் நம் பதிவுகளை கம்பன்,ஓட்டக்கூத்தன்,பிசிராந்தையார் போன்றோரை ஓட்டி எழுதினால் இந்த தொல்லை இருக்காது! இன்னும் விவாதிக்கலாம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//பணத்தாலும் புகழாலும் வாங்க முடியாத ஒன்று கல்வியால் மட்டுமே பெற முடியும் ('வாங்க' முடியாது) - இது என் அனுபவம். //

புரியலை

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//எதுக்கும் நம் பதிவுகளை கம்பன்,ஓட்டக்கூத்தன்,பிசிராந்தையார் போன்றோரை ஓட்டி எழுதினால் இந்த தொல்லை இருக்காது! இன்னும் விவாதிக்கலாம். //

அப்படி போடுங்க.

துரையும் அதுக்குத்தான் அப்படி கடோபநிஷது எடுத்தது. எவனும் கேட்கமுடியாது இல்ல.

அப்பாதுரை சொன்னது…

கட்டைவிரல் கேஸ் எனக்குத் தெரிஞ்ச முதல் intellectual piracy சமாசாரம் என்பதால் கேட்டேன் மோகன்ஜி. அந்த contextல் ஆசிரியரின் தொலைநோக்கு பற்றி நிறைய எழுதலாம். மகாபாரதத்தில் ஆழம் அதிகம்.

ஸ்ரீராம். சொன்னது…

//"துரையும் அதுக்குத்தான் அப்படி கடோபநிஷது எடுத்தது. எவனும் கேட்கமுடியாது இல்ல"//

ஹி..ஹி...ஆமாம்.

ஆனால் மோகன்ஜி பத்மநாபன் எல்லாம் பின்னி பெடல் எடுக்கறாங்களே...

நான் படித்து ரசிக்க மட்டுமே முடிகிறது. கேள்வி கேட்கத் தெரிவதில்லை. நான் நல்ல மாணவனா கெட்ட மாணவனா...

அப்பாதுரை சொன்னது…

கம்பனும் வால்மீகியை ஒட்டிததானே எழுதினாரு மோகன்ஜி? உங்க கவிதையை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கே?

சிந்திக்கபடவேண்டியவை சிந்திக்கப்பட்டு விட்டன
எழுதப்படவேண்டியவை எழுதப்பட்டுவிட்டன
- அரிஸ்டாடில் (அவருடைய குருக்களுக்கு மதிப்பு தரும் வகையில் சொன்னது)

சிந்திக்கபடவேண்டியவை சிந்திக்கப்பட்டு விட்டன
எழுதப்படவேண்டியவை எழுதப்பட்டுவிட்டன
அச்சடிக்கும் போது எல்லாம் தப்பாகி விட்டது.
- வுடி அலன்

RVS சொன்னது…

கல்வியை 'வாங்க' முடியாது என்பது உண்மைதான் அப்பாஜி!
ஆனால், படிக்காதவன் படிப்பில் மட்டுமே நல்ல மாணவன் இல்லை என்பது என் கருத்து. வேறு துறையில் முன்னேறினால் அவன் நல்ல மாணவன் கிடையாதா?
@ஸ்ரீராம்.. சும்மா என்ன மாதிரி ஏதாவது உளருங்க.. நல்லாசிரியர்கள் கரெட்க் பண்ணிப்பாங்க.. ;-) ;-)

சிவகுமாரன் சொன்னது…

என்னடா ஆளைக் காணோமேன்னு தேடாதீங்க அப்பாஜி. தினமும் வந்து போகிறேன் சத்தம் போடாமல் மக்கு மாணவனாய். கடைசி பெஞ்சில எட்டி பாருங்க.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! அப்பாஜி குட்டை உடைத்து விட்டீர்கள்!
//மோகன்ஜி, நீங்கள் எழுதும் ஆழங்கள் பயமுறுத்துகின்றது. உங்களை நேரே காண்பது கொஞ்சம் ரிஸ்க்தான் போலே. உங்களிடம் பேசும் அளவு எனக்கு அறிவு வேண்டுமே ?!?!//
@சாய்
மற்றும்

//ஆனால் மோகன்ஜி பத்மநாபன் எல்லாம் பின்னி பெடல் எடுக்கறாங்களே...//
@ஸ்ரீராம்
சாய்!ஸ்ரீராம்!! நீங்க நினைக்கிறமாதிரி எல்லாம் இல்லை. வெறும் குரங்குப் பெடல் தான் அடிக்கிறேன். இதிலே அப்பப்போ டபுள்சும் ஏத்திக்கறதுண்டு.
அப்பாஜி ஹோம்டர்ப்ல நான் பெடலடிக்கிரதால உங்களுக்கு அறிவு ஜீவித்தனமா தோணுது. சாய்! நாம லோக்கல் தாங்க!

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! பாத்தீங்களா! பாத்தீங்களா! நான் சொல்லி வாய்மூடல்லை. அதுக்குள்ள அதே கருத்தை இன்னும் அழகாக ஒருத்தர் சொல்லி இருக்கார் பாத்தீங்களா?
//கட்டைவிரல் கேஸ் எனக்குத் தெரிஞ்ச முதல் intellectual piracy சமாசாரம்//

ஆஹா! இந்தவகையிலத்தான் கேட்டீங் களா? நானாத்தான் ஒளறிட்டனா? எப்பிடியெல்லாம் போட்டு வாங்குராய்ங்கப்பு ?
அதான் சரி!

அப்பாதுரை சொன்னது…

அப்படி நினைக்கவில்லை RVS. 'நல்ல' என்ற அடைச்சொல் 'கெட்ட' என்பதையும் தானாகவே நினைவுபடுத்துவதால் ஒரு சங்கடம். வேறு துறையில் முன்னேறுவதால் கெட்ட மாணவன் ஆவதில்லை. வெற்றிக்கும் கல்வியறிவுக்கும் முடிச்சு போடுவதால் திரும்பத் திரும்ப வேறு துறைக்குப் போகிறோமோ? மாம்பழத்தையும் பலாப்பழத்தையும் ஒப்பிடலாமா?
மாறாக, முதல் ரேங்க வாங்கியவன் எல்லாம் நல்ல மாணவனா என்று ஆய்ந்தால் 'நல்ல' மாணவனின் இலக்கணம் புரியுமோ?

RVS சொன்னது…

//மாம்பழத்தையும் பலாப்பழத்தையும் ஒப்பிடலாமா?
மாறாக, முதல் ரேங்க வாங்கியவன் எல்லாம் நல்ல மாணவனா என்று ஆய்ந்தால் 'நல்ல' மாணவனின் இலக்கணம் புரியுமோ?//
இது நெத்தியடி! ஆனால் இங்கே X-ஐ ஆதரித்தால் Y- ஐ எதிர்க்கிறோம் என்ற ரீதியில் எடுத்துக்கொண்டால் அது மகாதப்பு என்று சொல்கிறீர்கள். சரியா? நானும் சாய், சிவாகுமாரன் சொல்ற மாதிரி தான்... இருந்தாலும் கொஞ்சம் ஓவர் வாய்.. அதுதான் சில்லரைத்தனமா கேட்டு புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்.. விளக்கத்திற்கு நன்றி ஆசானே! ;-)

geetha santhanam சொன்னது…

இந்த இரு மாணவர்களில் உங்கள் சாய்ஸ் என்ன என்று சொல்லவில்லையே. அறிய ஆவல்.