வருகைக்கு நன்றி.

நசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது.                  உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்?)                        வருகைக்கு நன்றி

2010/11/13

தொடங்குமுன்...


     'சயிருத்தீன் முகமது பின் ஒமர் ஷெய்க்' எனும் மாமன்னன் இந்தியாவின் பல இடங்களைக் கைப்பற்றினான். அசோகருக்குப் பிறகு, இந்தியாவின் துண்டுப் பிரதேசங்களை ஒரே அரசக்குடைக்குள் கொண்டு வந்த இவனுக்கு, பாபர் என்று ஒரு பொதுப்பெயர் உண்டு.
     வடக்கை வென்ற பொழுது, உள்ளூர் மன்னன் சிற்றரசர்கள் தலைவர்கள் எனப் பொதுமக்களின் அபிமானம் பெற்றப் பலரைச் சிறையிலடைத்தானாம். அதில் ஒரு ஆசிரியரும் அடக்கம். அறிவொளி தெறிக்க நின்ற முதிர்ந்த ஆசிரியரைச் சிறையில் சந்தித்த மன்னன், "நான் உலகை வென்ற மாமன்னன். அறிஞர்களை மதிப்பவன். உனக்கு என்ன வேண்டும்? பொன் பொருள் பெண் சிற்றூர் எது வேண்டுமானாலும் கேள், என்னால் தர முடியும்" என்றானாம். அதற்கு அவர் நிதானமாக, "அய்யா, நீ மாமன்னனாக இரு, தவறில்லை. உலகமே உன்னை வணங்கட்டும், நன்று. ஆனால் சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க முடியுமா ஐயா?" என்று கேட்டாராம். தன் தவறைப் புரிந்து கொண்ட மன்னன் வெட்கி, ஆசிரியரிடம் மன்னிப்புக் கோரி, அவரை விடுதலை செய்தானாம்.

'ஐயா, உலகத்தையே வென்ற உன்னால், இதைத் தருவேன் அதைத் தருவேன் என்று கொக்கரிக்கும் உன்னால், ஒளியைத் தர முடியுமா? உனக்கும் உன் பாட்டனாரின் பல்லாயிரம் பாட்டனாருக்கும் முன்பிருந்து, யாரும் கேளாமல் தானாகவே வந்து இருளை அகற்றிக் கொண்டிருக்கிறதே - இயற்கை ஒளி - அதற்கு ஈடாக உன்னால் என்ன தரமுடியும்? எனக்குச் செல்வம் தேவையில்லை; உடைமை தேவையில்லை; வெற்றி தேவையில்லை. என் தேவை அறிவு. அறியாமை அச்சுறுத்தும் பேரிருள்; அறிவே அவ்விருளகற்றும் ஒளி. என்னிடம் அறிவு இருக்கிறது. அது அறிஞர்கள் தொடர்பால் இன்னும் வளர்கிறது. உன்னால் அறிவைத் தர முடியுமா?' என்பதே சிறைப்பட்ட ஆசிரியரின் விண்ணப்பத்துக்கு உட்பொருள்.

எது வெற்றி? எது செல்வம்? எது ஆளுமை? 'கொண்டு வந்ததென்ன, இதில் கொண்டு போவதென்ன?' என்றச் சாதாரணத் தத்துவத்தின் புதைபொருள் புரிந்தவர்களுக்கு, மேற்கண்டச் சாதாரணக் கேள்வி-பதில் விளக்கம் அசாதாரணமாகத் தோன்றும். அவர்களுடன் இந்த வலைப்பூ வளரும்.

17 கருத்துகள்:

Sethu சொன்னது…

Expecting more on Katopanishad. Good introduction.

அப்பாதுரை சொன்னது…

வாங்க சேது. மனம் ஒரு நிலையிலில்லை, அதான் தொடங்கி விட்டேன்.

பாலராஜன்கீதா சொன்னது…

வாசிக்க ஆவலுடன் இருக்கிறோம்.

பத்மநாபன் சொன்னது…

அமைதியாக தொடங்கி விட்டீர்கள் .. அருமையான அறிமுகத்தோடு .... ஆவல் கூடி விட்டது .

நட்பை பாராட்டுவதும் ....நற்தமிழ் எழுத்தை காணிக்கையாக்குவதும் போற்றுதலுக்குரியது

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! உங்கள் துவக்கம் மிகுந்த ஆவலைத் தூண்டுகிறது. காத்திருக்கிறேன்! நீங்கள் எடுத்திருக்கும் முயற்சி பிரயாசை அதிகம் தரக் கூடும்..
எனினும் உங்கள் கைவண்ணம் மிளிரட்டும்.. உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும்,பாராட்டும் அப்பாஜி!

அப்பாதுரை சொன்னது…

ஆதரவுக்கு நன்றி, பாலராஜன்கீதா. எழுதிடுவோம். முன்னுரையில் என்னுரை கொஞ்சம் இருக்கிறது :) அதற்குப் பிறகு நசிகேதன் கதை.

அப்பாதுரை சொன்னது…

உங்கள் இலக்கிய மோப்பம் என்னை மிகவும் வசீகரிக்கிறது பத்மநாபன். வருக. அமைதியாகத் தொடங்கியதன் பின்னணி.. அச்சம் தான்.

அப்பாதுரை சொன்னது…

நீங்கள் சொல்வது புரிகிறது, மோகன்ஜி. எனக்கும் அந்த ஐயமுண்டு. அதனால் இது அடிப்பயணம். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

அரசூரான் சொன்னது…

ஆரம்பமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

வருக அரசூரான். வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஸ்ரீராம். சொன்னது…

நானும் வருகிறேன் படிக்க... ஆர்வத்துடன்.

meenakshi சொன்னது…

அறிமுகமே அழகாக இருக்கிறது. இன்றுதான் நிதானமாக படிக்கிறேன். அபிராமி அந்தாதி போல் இதுவும் தடங்கல் எதுவும் இல்லாமல் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.

அப்பாதுரை சொன்னது…

நன்றி, meenakshi

சமர்த்து சொன்னது…

//சூரிய ஒளியை மறைத்தபடி நிற்கிறாய், கொஞ்சம் ஒதுங்க முடியுமா ஐயா?"//

idhe pondra oru nigalvai, Diogenes Alexander munbu sonnathaai padithathunduinga sir.

unga pathivulagil niraya therinjukka mudiyurathu.
nandrigal

அப்பாதுரை சொன்னது…

வருக Bootcut.
அலெக்சேந்தரிடம் ஒரு அறிஞர் சொன்னதாக சொல்லப்பட்டிருப்பதும் உண்மையே; இந்தக் கருத்து பல விதங்களில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது - நல்ல கருத்துக்களுக்கு அழிவில்லை என்பதற்கு ஒரு உதாரணம். துரோணர் துரியோதனனிடம் சொன்னதாகவும் மகாபாரதத்தில் வருகிறது. போர் தொடங்குமுன் நடந்த இறுதி பேச்சு வார்த்தைகள் முறிந்ததும், துரியோதனன் பீஷ்ம துரோணர்களை பொதுசபையில் தன் ஈனச் சொல்லால் தாக்கும் பொழுது முதியவரான பீஷ்மர் துரியோதனனைப் பார்க்க வேண்டாம் என்று துரோணர் குறுக்கே வந்ததாகவும் (தகாத சொல்லையும் தகாதவர் பார்வையையும் தான் தாங்கிக்கொள்ளும் பொருட்டு), அந்த ஒரு கணத்தில் எதிரே அமர்ந்திருந்த கண்ணனின் உருவம் பீஷமருக்குத் தெரியாமல் போனதாகவும் - அறியாமல் செய்த பிழையானாலும் அந்த ஒரு கண ஒளி மறைப்பால் துரோணரும் பீஷமரும் போரில் கண்ணனின் அருளுக்குப் பதில் கண்ணனின் இருளினால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. சுவையான இட்டுக்கட்டு. ஒளியை மறைத்தால் இருள் என்ற சாதாரண தத்துவம் மனதில் நிலைக்க இப்படிக் கதை கட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது - நமக்கும் நல்ல வாய்ப்பு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam சொன்னது…

துரோணர், பீஷ்மர் பத்தி வியாச பாரதத்தில் படித்த நினைவு இல்லை என்றாலும் பாபரின் இந்தக் கேள்வியும், ஆசிரியரின் பதிலும் பலமுறை படித்திருக்கேன். அருமையான தொடக்கம். மனம் ஒரு நிலையில் இல்லாதபோதே இப்படி எழுத முடிந்தால், மனம் ஒருநிலைப்பட்டு எழுதுவது எப்படி இருக்கும் என யோசித்துத் திகைக்கிறேன்.

Geetha Sambasivam சொன்னது…

பூத்தூரிகை வலைப்பூ பற்றியோ, அரசன் என்பவர் பற்றியோ அறிந்திலேன். இயன்றால் சுட்டி கொடுங்க. போய்ப் பார்க்கிறேன். நல்லாசிரியர் தான். நல்லதொரு காணிக்கையும் கூட.